பிகார் மாநிலம், மதுபனி மாவட்டத்தில் பேருந்து ஒன்று குளத்துக்குள்
விழுந்து
விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி 50 பயணிகள் உயிரிழந்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:
மதுபனியிலிருந்து 65 பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சீதாமரி நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. அப்போது நிலைதடுமாறிய பேருந்து, பசைதா செளக்கில் இருந்த குளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் நீரில் தத்தளித்தனர்.
தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். இதனிடையே, நீச்சல் தெரிந்த சில பயணிகள் நீந்தி பத்திரமாக கரை சேர்ந்தனர். இதுவரை 32 பயணிகளின் சடலங்களை மீட்புக் குழுவினர் கண்டெடுத்தனர். குளத்தில் மூழ்கிய மேலும் சிலரது நிலை என்னவென்று தெரியவில்லை.
கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் குளத்தில் விழுந்த பேருந்து மீட்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர். dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக