சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
நான்கு பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கே.எம்,சி.யைச் சேர்ந்த செல்வக்குமார், ராயப்பேட்டையில் உள்ள பிரேத பரிசோதைனை நிபுணர்களான மணிகண்டன், வினோத் ஆகியோருடன் இணைந்து ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார். வீடியோ பதிவுடன் இந்த பிரேத பரிசோதனை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ராம்குமார் தந்தை பரமசிவம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சங்கரசுப்பு மேல்முறையீடு செய்தார். தாங்கள் கூறும் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மாஜிஸ்திரேட்டை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை இன்று மாலை அவசர வழக்காக விசாரிக்க உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிபதிகள் குளுவாடி ரமேஷ், வைத்தியநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிசங்கர், "இது ஒரு சென்சிடிவான மரணம் கிடையாது வழக்கமான தற்கொலை தான். வழக்கத்திற்கு மாறாக என்கவுண்டர் மூலமாகவோ சந்தேகத்திற்கு இடமாகவோ மரணம் அடைந்தால் தான் மனுதாரர் தரப்பில் ஒருவரை அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இது போன்ற வழக்கில் மனுதாரர் தரப்பை அனுமதித்தால் தவறான முன்உதாரணமாக மாறிவிடும்,அரசு தானாக மூன்று பேர் கொண்ட மருத்துவகுழுவை அமைத்தது. அதன் பிறகு நீதிமன்ற உத்தரவு படி நான்காவதாக ஒரு மருத்துவர் சேர்ககப்பட்டுள்ளார். இந்த மருத்துவருக்கும் சுவாதி,ராம்குமார் வழக்குகளில் எந்த வித தொடர்பும் கிடையாது. இவை எல்லாம் கருத்தில் கொண்டு தான் தனி நீதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்" என்றார்.
இதன் பின்னர் நீதிபதிகள், சிறையிலே காவல்துறை கட்டுப்பாட்டில் கைதி இறந்தாலே அதற்கு காவல்துறை தான் பொறுப்பு. தனியார் மருத்துவமனை மருத்துவரை அனுமதிப்பதற்கு பதிலாக ஏன்அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவரை ஏன் நியமிக்ககூடாது என கேள்வி எழுப்பினார்கள்.
மனுதாரர் தரப்பில், ராம்குமார் தந்தை பரமசிவன் தரப்பு நான்கு பேர் கொண்ட மருத்துவ குழு மீது எந்த விதமான குற்றச்சாட்டும் தெரிவிக்கவில்லை. ஆனால் தங்கள் தரப்பில் ஒரு மருத்துவரை அனுமதிக்கும் பட்சத்தில் தான் ராம்குமார் மரணம் தற்கொலை இல்லை என்று நிருபிப்பதற்கு அடுத்த கட்ட வழக்கு விசாரணையை மேற்கொள்ள முடியும். எங்கள் தரப்பிற்காக அரசு மருத்துவர்கள் யாரும் முன்வர மாட்டார்கள். அப்படியே முன்வந்தாலும் கூட பணியை ராஜினாமா செய்து விட்டு தான் வரமுடியும் என்று வாதிட்டார்கள்.
இதையடுத்து நீதிபதி குழுவாடி ரமேஷ் " பிரேதபரிசோதணையை பார்வையிட தனியார் மருத்துவமனை மருத்துவரை அனுமதிக்கலாம் என்றார். நீதிபதி வைத்திநாதன் " பிரேதபரிசோதனையை பார்வையிடவோ அல்லது அந்த குழுவில் இடம்பெறவோ தனியார் மருத்துவரை அனுமதிக்க முடியாது. ஆனால் ராம்குமார் தந்தை தரப்பில் பரிந்துரைக்கப்படும் அரசு மருத்துவரை வேண்டுமானால் அனுமதிக்கலாம் என்றார்.
இதன் மூலம் இரண்டு நீதிபதிக்கிடையே மாற்று கருத்து ஏற்படுவதால் வழக்கில் மற்றொரு நீதிபதியின் கருத்தை கேட்பதே சரியான இருக்குமென கூறி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர்.
இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி முடிவு எடுக்கும் வரை ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையின்போது, பார்வையாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. - ஜீவாபாரதி நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக