திங்கள், 19 செப்டம்பர், 2016

காவிரி தண்ணீரை நிறுத்தியது கர்நாடகம்! வந்த தண்ணீர் சம்பா சாகுபடிக்கு போதாது!


மின்னம்பலம்.காம்  :ராம்குமார் விவகாரம் இந்த மனுவை கர்நாடக அரசு அட்வகேட் ஜெனரல் மதுசூதனன் நாயக், வழக்கறிஞர்கள் ரகுபதி, மோகன் கத்தார்ஜி ஆகியோர் இரவு 10.30 மணியளவில் அவசர அவசரமாக உச்சநீதிமன்றப் பதிவாளர் வீட்டுக்குச் சென்று கொடுத்துள்ளனர்.
பூதாகரமாக வெடித்து அனைவரின் கவனமும் அந்தப்பக்கம் திரும்பியுள்ள நிலையில், நேற்று மதியத்தோடு தமிழகத்துக்கு திறந்து விட்ட தண்ணீரை நிறுத்திக் கொண்டது கர்நாடக அரசு. முன்னதாக, நாளொன்றுக்கு 15,000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, காவிரியில் தண்ணீரை திறந்து விட்டது கர்நாடக அரசு. தண்ணீர் திறப்புக்கு, கர்நாடகத்தில் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர் கன்னட அமைப்பினர். இந்நிலையில், கர்நாடக அணைகளில் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால் தமிழகத்துக்குக் கூடுதலாக தண்ணீர் திறக்க முடியாது என்று அம்மாநில அரசு, உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவில், ‘உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்துக்கு தினமும் 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட்டுள்ளோம். இதுவரை 65,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால், கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, தண்ணீர் திறக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘வரும் 13, 14ஆம் தேதிகளில் உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால், இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து திங்கட்கிழமையே விசாரணை செய்ய வேண்டும்’ என்று பதிவாளரிடம் கோரிக்கை வைத்தனர் கர்நாடக அரசு வழக்கறிஞர்கள்.
இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டியது மாநில அரசின் கடமை. பொது மக்களும் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னையை கர்நாடக அரசு சரியாக கையாளவில்லை” என்று கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், “தண்ணீர் திறப்பது தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது. செப்டம்பர் 17ஆம் தேதி வரை 5ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி 15,000 கன அடி நீரும், செப்டம்பர் 18 முதல் 20ஆம் தேதிவரை விநாடிக்கு 12,000 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விட வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு தண்ணீரை திறந்து விட்ட கர்நாடக அரசு, நீர்மட்டம் குறைந்து விட்டதால் இனியும் நீர் திறக்க முடியாது என்று தண்ணீரை நேற்றோடு நிறுத்தி விட்டது. ‘செப்டம்பர் 20ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட இருக்கும் நிலையில் இப்போது 84.76 அடியாக உள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது’ என்கிறார்கள் தமிழக விவசாயிகள்!

கருத்துகள் இல்லை: