டெல்லியின் பரப்பான சாலை ஒன்றில், 20 முறைக்கும் அதிகமாக கத்தியால் குத்தப்பட்டு பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
டெல்லியின் வடக்கு பகுதியான புராரியில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆண், கருனா என்னும் 22 வயதுடைய பள்ளி ஆசிரியையின் அருகில் வருவதும் கத்தியால் பல முறை அவரை தாக்குவதும் சிசிடிவி விடியோ காட்சியாக பதிவாகியுள்ளது.
சிசிடிவி காட்சியின்படி, முதலில் மக்கள் நடந்து செல்கையில், தொடர்ச்சியாக அவரை கத்தியால் குத்துவதும் பின்னர் அப்பெண்ணின் நெற்றியில் கல்லால் அடித்து பின்பு எட்டி உதைப்பதும் பதிவாகியுள்ளது.
தப்பிக்க முயன்ற அவரை அங்கிருந்த பொது மக்கள் போலிசாரிடம் பிடித்துக் கொடுத்தனர். பின்பு அவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.
அப்பெண் காலை 9 மணியளவில் தனது உறவினருடன் நடந்து செல்லும் போது இந்த சம்பவம் நடைபெற்றது.
தாக்குதல்தாரி, முன்பு அண்டை வீ ட்டுக்காரராக இருந்த அந்தப் பெண்ணை விரும்பியதாகவும் ஆனால் தாக்குதல்தாரி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் அவரை அந்தப் பெண் புறக்கணித்ததாகவும் போலிஸ் அதிகாரி இஷா பாண்டே பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்தாரி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக அவரின் சகோதரர் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு எதிராக அப்பெண்ணின் குடும்பத்தினர் போலிஸில் புகார் கொடுத்துள்ளனர்.
முன்னதாக போலிஸ் துணை ஆணையர் மதூர் வெர்மா, இது குறித்து பெண்ணின் குடும்பத்தார் ஐந்து மாதங்களுக்கு முன்னதாக புகார் கொடுத்ததாகவும், ஆனால் இரண்டு குடும்பத்தினரும் சமரசம் செய்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்பெண் தொடர்ந்து தாக்கப்படுவதும் ஆனால் அதனை கடந்து செல்லும் எவரும் அதை தடுக்க முன்வரவில்லை என்பதும்தான் பெரும் சீற்றத்தை உருவாக்கியுள்ளது.
கடந்த மாதம் டெல்லியில், விபத்தில் சிக்கி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்கு போராடிய ஒருவருக்கு யாரும் உதவ முன் வரவில்லை.
இச்சம்பவம் குறித்த படங்களும், தாக்கப்பட்ட பெண்ணுக்கு பொது மக்கள் உதவ முன்வராத நிலையும், மனிதாபிமானமற்ற தன்மையும் அதிகரித்து வருகிறதா என்ற விவாதங்களை எழுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக