ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

உலகத்தர போர்க்கப்பல்: இந்திய கடற்படை பெருமை


minnambalam.com  நமது மின்னம்பலம் இணையதளத்தில் நேற்று மாலை செய்தியில் இந்தியாவுக்குப் பெருமை தரக்கூடிய ‘மர்முகாவ்’ என்ற போர்க்கப்பல் குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். அது குறித்த கூடுதல் தகவல்கள் இதோ…
மும்பை நகர மோர்முகாவோ துணை மாவட்டத்தில் இந்தியக் கடற்படை உயர் ரக ஏவுகணை போர்க்கப்பலை நிறுவியுள்ளது. கடற்படைத் தளபதி சுனில் லம்பா, இது உலகின் மிகச்சிறந்தக் ஏவுகணை போர்க்கப்பல்களுக்கு எல்லாம் ஈடு கொடுக்கக் கூடிய இணையென பெருமையாகக் கூறியுள்ளார்.
இந்தக் கப்பல் சென்டர் ஓண்ட் மாஜ்கவோன் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (center owned mazgaon ship builders ltd) என்னும் நிறுவனத்தால், நிதி மூலதனத்தில் முதன்மையான நகரமென கருதப்படும் மும்பையில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தக் கப்பல் விசாகப்பட்டினத் துறைமுக வர்க்க நியமனத்தின் கீழ் வருகிறது. இது பாதுகாப்புத்துறை அமைச்சரகத் திட்டம் 15பி கீழ் ஆய்வுக்கு உட்படும். இந்தக் கப்பலைப்போல் 2020லிருந்து 2024க்குள்ளாக நான்கு கப்பலை நிறுவ வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது இந்திய அரசு.
7300 டன் எடை கொண்ட இந்தப் போர்க்கப்பல் மணிக்கு 55.56 என்ற கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடியது. கப்பலின் ஒவ்வொரு தளத்துக்கும் நிலத்தில் இருந்தபடியே எய்தப்படும் ஏவுகணைகள், நீர்மூழ்கி ஏவுகணைகள், விமான ஏவுகணைகள் இருக்கின்றன. மற்றும் தற்காப்புக்கு இரண்டு நீர்மூழ்கி வான ஊர்திகளும் கடைசி தளத்தில் உள்ளன. இது போன்ற சக்தி வாய்ந்த ஏவுகணை போர்க்கப்பல்களை தன் வசம் வைத்துள்ள நாடுகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கடற்படைத்தளபதி கூறுகையில், இந்தக் கப்பல் தனிச்சிறப்பான முறையில் கடற்படைக்கு வலிமை சேர்க்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் பத்திரம் 2011இல் கையெழுத்திடப்பட்டு விட்டதாகவும் கூறினார். இந்தக் கப்பல் சர்வதேசப் போர்க்கப்பல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய ஒன்று எனவும் டி.ஆர்.டி.ஓ. அமைப்பைச் சேர்ந்த இந்தியர்களால் வடிவமைக்கப்பட்டது என்றும் கூறினார். மேலும், பல அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகளின் ஒத்துழைப்பும் இதில் உண்டு என்றும் கூறியவர் இந்தக் கப்பல் பிரதமர் நரேந்திரமோடியின், ‘மேக் இன் இந்தியா டிரைவ்’ திட்டத்தின் கீழும் வரும். ஏனெனில் இது உள் நாட்டிலேயே நம்மவர்களால் தயாரிக்கப்பட்டதென மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை: