சனி, 24 செப்டம்பர், 2016

நான் தவறு செய்யவில்லை; வெளியே வந்து உண்மையைச் சொல்றேன்”: பெற்றோரிடம் அழுத ராம்குமார்

thetimestamil.com :மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் அசாதாரண முறையில் புழல் சிறையில்மரணமடைந்தார். அவருடைய மரணத்தை தற்கொலை என காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. ராம்குமாரின் பெற்றோரும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் முன்னாள் நீதிபதிகளும்கூட இது கொலையாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.
ஸ்வாதி கொலையில் ராம்குமாருக்குத் தொடர்பில்லை, வேறு சிலருக்குத் தொடர்பிருக்கிறது என சொல்லிவருகிறார் சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரன். ராம்குமார் வழக்கறிஞருக்கு இவர் தகவல்கள் திரட்டித் தருவது போன்ற உதவிகளையும் செய்துவருகிறார். ராம்குமார் மரணத்தில் இவர் தன்னுடைய கருத்தாக ஒரு பதிவை தனது சமூக ஊடகப் பக்கத்தில் எழுதியிருக்கிறார். அதில்,
“ராம்குமார் மட்டும்தான் குற்றவாளி என்றும் தங்களிடம் ஆதாரம் இருப்பதாகவும் 30 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோம் என்றும் கூறிய போலிசார் ராம்குமாரை கொலை செய்யும் வரை அதாவது மூன்று மாதம் வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததின் காரணம் ஏன்?

90- நாளில் Mandatery Report வரவில்லை எனில் நிதிபதி தானகவே முன்வந்து ஜாமினில் விடுவிக்கும் நிலை உள்ளது.. அதும் ராம்குமார் இறக்கும் அடுத்த நாள் அவரது ஜாமின் வழக்கு விசாரனைக்கு வருக்கிறது இது ராம்ராஜ் வழக்கறிஞர் மூலம் ராம்குமாருக்கும் தெரியப்படுத்தப்பட்டது அப்படி இருக்கும்போது ராம்குமார் தற்கொலை செய்துகொல்ல அவசியம் என்ன?
அடுத்து ராம்குமாரின் CBI விசாரனை குறித்த மனுவை எதிர்தரப்பு வாதத்தை கேக்காமலே தானே நிராகரித்த நீதிபதி பிரகாஷ் செயல் சட்டத்துக்கு புறம்பானது மற்றும் கட்டப்பஞ்சாயத்து போலானது..
ஒருவேலை CBI விசாரனை எடுக்கப்பட்டிருந்தால் ராம்குமார் CBI துறை கட்டுப்பாட்டில் வந்திருப்பார் அவர் பாதுகாக்கப்பட்டிருப்பார்.
சுவாதி வழக்கில் ராம்குமாரின் அனுமதி வாங்காமல் அவருக்கு ஜாமீன் எடுக்க முதலில் வந்தது கிருஷ்ணமூர்த்தி (பிஜேபி) அவரது நோக்கம் ராம்குமாரை ஜாமீனில் வெளியே எடுத்து கொல்வதாக கூட இருக்கலாம்… (இந்துத்துவா அரசியல் அம்பலப்பட்டுவிடுமோ என்ற காரணத்தால்)
அடுத்து ராம்குமார் கொலை செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு பிஜேபியின் பொன். ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு முதல்வரிடம் தனியே சந்திப்பு.
புழல் சிறையில் ஜெய்லர் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டார் .அவருக்கு பதிலாக ஜெயராமன் ஜெயிலராக பொறுப்பேற்றார். அவருக்கு இன்னும் 2 மாதத்தில் ரிட்டய்ட்மென்ட் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த நாள் ராம்குமார் தற்கொலை என்று ஊடகத்தில் செய்தி வருகிறது…
போலிசாரின் FIR (பக்கம் -2) ரிப்போர்ட்டில் 4 மணிக்கு சிறைக்காவலர் பேச்சிமுத்துடம் அனுமதி பெற்று ராம்குமார் தண்ணீர் குடிக்க வெளியே திறந்து விட்டதாக கூறியிருக்கின்றனர்.. சிறைவாசியை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சிறையில் அடைக்கக் கூடாது.. அப்படி இருக்கும்போது ஏன் சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.? காரணம் என்ன?
FIR-ல் Dispansari (சிறை மருத்துவமனை வார்டில் வைத்திருந்ததாக கூறிகின்றனர். அப்படியானால் ஏன் அவரை மருத்துவமனையில் அடைத்தனர்? அவருக்கு அப்போது எந்த நோய் தாக்கப்பட்டது? உடல் நிலைக்கு என்ன ஆனது?
ராம்குமார் கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள் தான் ராம்ராஜ் ராம்குமாரை சந்தித்து விட்டு வந்திருக்கிறார் அப்படி இருக்கும்போது ஒரே நாளில் அவருக்கு உடல்நிலை பதிப்பு வர காரணம் என்ன? மெடிக்கல் ரிப்போர்ட் எங்கே?
டிஸ்பன்சரி வார்டிலிருந்து மருத்துவமணைக்கு கொண்டு சென்றதாக FIR கூறியுள்ளனர். டிஸ்பன்சரி வார்டும் மருத்துவமனையும் ஒரே இடம்தான் அது ஆங்கிலம் இது தமிழ். FIR-ல் மருத்துவமனையிலிருந்து திரும்ப மருத்துவமனைக்கே கொண்டு சென்றதாக கூறுகின்றனர்.
அதற்கு இத்தனை நிமிடம் ஆகிவிட்டது என்று கூறுகின்றனர்.
ஏன் பொய் கூறவேண்டும்?
சிறையில் சிறை ஆம்புலன்ஸ் இருக்கும் போது FIR -யில்108 ஆம்புலன்சுக்காக ஏன் காத்திருக்க வேண்டும்? ஏன் அதில் செல்ல வேண்டும்?
புழல் அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் செல்லாமல் ஏன் ராயப்பேட்டை வரை ராம்குமாரை அழைத்து செல்லவேண்டும்?
ராம்குமார் அப்பாவிடமும், ராம்ராஜ் வழக்கறிஞடமும் ராம்குமாருக்கு வயிருவலிதான் அதனால் தான் ராயப்பேட்டைக்கு அழைத்து சென்றோம் என்று பொய் கூற காரணம் என்ன?
நான் கொடி எரித்த வழக்கில் கை உடைக்கப்பட்டு HSB (High Secuirty Block) ராம்குமார் இருந்த அதே சிறையில்தான் போடப்பட்டிருந்தேன் கிட்டத்தட்ட 14 இரும்பு கேட்டுகள் தாண்டிதான் வெளிய வரமுடியும் … ராம்குமாருக்கு ஏற்கனவே இரண்டு பேர் பாதுகாப்புக்கு இருக்கும்போது எப்படி அவர் தற்கொலை செய்திருப்பார். படத்தில் காட்டப்படுவது HSB இல்லை..
ராம்குமார் ஸ்விட்ச் பாக்சை உடைத்து பல்லால் கடித்ததாக FIR -யில் கூறியிருக்கின்றனர். ஸ்விட்ச் பாக்ஸ் உடைக்கப்படவில்லை. கிழட்டப்பட்டிருக்கிறது. அவன் இது செய்ய எப்படியும் 2,3 நிமிடம் ஆகியிருக்கும் சிறைக்காவலர் பச்சமுத்து அதுவரை என்ன செய்துகொண்டிருந்தார்?
4.30 முதல் 5.08 வரை Dispansar வார்டில் உள்ள பாரா ரிப்போர்ட் எங்கே? கூட இருந்தவர்கள் எத்தனை பேர்?
ராம்குமாரை ஊடகத்தின் முன் காட்டாமல் இருக்க போலீசார் மிகவும் மெனக்கெட்டனர். கடைசி வரை அவரை ஊடகம் முன்பு நிருத்தவே இல்லை. ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சி வழக்கறிஞர் மூலமாக ராம்குமாரிடம் கேள்வி பதிலாக எழுதி வாங்கியது.
ராம்குமார் வெளியே வந்தால் குற்றவாளியை அடையாளம் காட்டிவிடுவான் என்பதால் ராம்குமாரை போலிசார் மிரட்டியே வைத்திருந்தனர். ராம்குமாரும் வழக்கறிஞர் ராம்ராஜிடம் என்னை ஜாமீனில் வெளியே எடுங்கள் எல்லா உண்மையும் கூறுகிறேன் இங்க பக்கத்துல போலிஸ்காரங்க இருக்காங்க என்று கூறினான்.
இப்படி இருக்கும் பச்சத்தில் அவன் வெளியே வந்தால் உண்மையை ஊடகத்திடம்சொல்லுவான மாட்டானா? என்று ஆராய புதிய தலைமுறை மூலம் போலீசார் எழுதி சோதித்தனர். அதில் அவன் உண்மையை சொல்லவும் கொன்றுவிட்டனர்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி செப்ட்-10 தேதி எழுதி வாங்கியதை ஏன் அன்றே வெளியிடவில்லை.? ராம்குமார் இறந்த உடனேதான் அதை வெளியிட்டது. அதற்கு முன்பு அதை போலிசாரிடம் திறந்து காட்டியிருக்கலாம்.
தன் தாய் தந்தையை மனுவில் நேரில் பார்க்கும்போது கூட நான் தவறு செய்யவில்லை என சொல்லி கதறி அழுதான் உண்மையை செல்லு என்று பெற்றோர்கள் கேட்டபோது நா வெளிய வந்து சொல்றேன் பக்கத்துல விஜிலென்ஸ் இருக்காங்க என்று கூறினான். இதை அவனது பெற்றோர்கள் என்னிடம் கூறினார்கள்.
அதே விஜிலென்ஸ் ஆபிசர்கள் நான் திருச்சி சிறையில் இருக்கும்போது என்னையும் வந்து தனியாக விசாரித்தனர். ராம்குமார் கதறி அழுத்தை அவர்களே என்னிடம் கூறினார்கள்.
அடுத்து கொலைச்செய்யப்பட்ட ராம்குமாரின் உடலை ராம்குமார் தந்தை சொல்கிற மருத்துவர் பிரேத பரிசோதனை செய்ய நீதிபதி ரமேஷ் ஒத்துக்கொண்டார். ஆனால் இரண்டாவது நீதிபதி வைத்தியநாதன் மறுத்து விட்டார்.
அடுத்த நாள் (நேற்று) நீதிபதி கிருபாகரன் தலைமையில் கூடியபோது நீதிபதி சொன்ன தகவல் ஆச்சிரியத்துக்குரியது.. நீங்கள் சொல்லும் மருத்துவரையெல்லாம் வைக்க முடியாது வேண்டுமானால் AIMS  டாக்டரை நான் பரிந்துரிக்கிறேன் என்றார். இது நீதித்துறைக்கு புறம்பானது. ஆமாம் இல்லை என்றுதான் தீர்ப்பு வரவேண்டும். ஆனால் சிபாரிசு செய்வது என்பது கட்டப் பஞ்சாயத்து போன்றது.. பிறகு செப்டம்பர் 27 வரை பிரேத பரிசோதனை தள்ளிவைப்பதாக கூறினார்.
இந்த போலி ஜனநாயகத்தில் உழைக்கும் மக்களின் பிணத்துக்குக் கூட நீதி கெடைக்காது.. பார்ப்பனர்க்கும், கார்ப்ரேட்டுகளுக்கும் உரியதே இந்த இந்திய சட்டம்” என தன்னுடைய பதிவில் எழுதியிருக்கிறார் திலீபன் மகேந்திரன்.

கருத்துகள் இல்லை: