ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

பன்னீருக்கும் நத்ததிக்கும் 1900 கோடி ரூபாய்க்கு அன்புநாதன் வாங்கிக் கொடுத்தார். ஹாங் காங் மற்றும் துபாயில்...

கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல நத்தம் விசுவநாதன், ஓ.பன்னீர்
செல்வம்,  ஆர்.வைத்திலிங்கம், சைதை துரைசாமி ஆகியோரின் சொத்து பற்றி ஆராய்ந்த வருமானவரித்துறை பல கிளுகிளுப்பான விஷயங்களைக் கண்டுபிடித் திருக்கிறது. எதைக் கண்டுபிடித்தாலும் அதை ஆவணப்படுத்துவது வருமான வரித்துறையின் நடைமுறை. அந்த வகையில் கரூரில் ஓட்டுக்கு பணம் கொடுக்க போலி ஆம்புலன்சுடன் பிடிபட்ட அன்புநாதனும் இந்த அ.தி.மு.க. வி.ஐ.பி.க்களும் ஆடிய கிளுகிளுப்பு ஆட்டங்களையும் ஆவணப் படுத்தியிருக்கிறது.>வருமானவரித்துறை அன்புநாதனை பற்றி தயாரித்த ஆவணத்தில் (இதன் சில பகுதிகளை கடந்த இதழில் நக்கீரன் வெளியிட்டிருந்தது) கிளு கிளு சமாச்சாரங்கள் பற்றியும் எடுத்துச் சொல்லி யிருந்தது. ""2012ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை 90 நாடுகளுக்கு அன்புநாதன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். 2015ஆம் ஆண்டில் மாதம் ஒருமுறை வெளிநாட்டிற்கு பறந்துள்ளார். நத்தம், ஓ.பி., வைத்தி, சைதை துரைசாமி போன்ற வி.ஐ.பி.க் கள் பணத்தை தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் முதலீடு செய்திருந்தாலும்... தாய்லாந்துதான் அவ ருக்கு மிகவும் பிடித்த நாடு. காம கேளிக்கை சுற்றுலாவுக்கு (நங்ஷ்ன்ஹப் பர்ன்ழ்ண்ள்ம்) மிகவும் புகழ்பெற்ற அந்த நாட்டிற்கு "முதலீடுகளை மேற்பார்வையிடு கிறேன்' என்ற பெயரில் நத்தம், ஓ.பி., வைத்தி ஆகியோரை அழைத்துச் சென்று மகிழ்வித்திருக் கிறார்
அன்புநாதன். தாய்லாந்தில் உள்ள காசி கோன் வங்கி எனப்படும் "கே' வங்கியில் இந்த மூவரின் பணத்தையும் முதலீடு செய்துள்ளார் அன்புநாதன்.

ஓ.பி., வைத்தி, நத்தம் போன்ற மூத்தவர்களை மட்டுமல்ல, ஓ.பி.யின் மகன் ரவீந்திரநாத், நத்தத்தின் மகன் அமர், துரைசாமியின் மகன் வெற்றிக்கும் தாய்லாந்தை சுற்றிக்காட்டி கேளிக்கை விருந்து அளித்திருக்கிறார். அதற்காக நானி என்பவரை உப யோகித்தார்'' எனச் சொல்லும் வருமானவரித்துறை, "அந்த நானி, காசிகோன் வங்கி (கே.வங்கி) எனப்ப டும் தாய்லாந்து வங்கியின் ஏஜெண்டாக மட்டுமல்ல பலான காரியங்களுக்கும் கிளுகிளுப்பான சமாச்சாரங்களுக்கும் அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.க்களின் ஏஜெண்டாக செயல்பட்டிருக்கிறார்' என குறிப்பிட்டுள்ளது. அத்துடன், நானியின் சர்வதேச தொலைபேசி எண்ணிற்கு (+66808678674) அமைச்சர்களும் அன்புநாதனும் தொடர்ந்து பேசி வந்ததையும் பதிவு செய்துள்ளது.
"தாய்லாந்து போன்ற வெளிநாட்டில் மட்டு மல்ல தமிழ்நாட்டிலும் அ.தி.மு.க. வி.ஐ.பி.க்களுக் காக பல கிளுகிளுப்பான வேலைகளில் ஈடுபட்டார் அன்புநாதன்' என்றும் வருமானவரித் துறை தெரி விக்கிறது. ""தமிழ்த் திரைப்பட உலகில் கோடிக்கணக் கில் முதலீடு செய்துள்ள அன்புநாதன், சினிமா வாய்ப் புத் தேடி அலையும் புதுமுக நடிகைகள் பலரை பெரிய தயாரிப்பாளர் என்கிற கித்தாப்பில் மயக்கிச் சாய்த்துள்ளார். குறிப் பாக சிறிய விளம்பரப் படங்களில் தலை காட்டிவிட்டு, "நமக்கு சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைக்காதா?' என ஏக்கத்துடன் முயற்சிசெய்யும் விளம்பர மாடல்கள் என்றால் அன்பு நாதனுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களை முதலில் தன் வசப்படுத்திவிட்டு, அதற்குப் பிறகு அவர்களை தனது முதலீட்டு முதலாளிகளான மாண்புமிகுக்களுக் கும் அவர்களின் வாரிசுகளுக்கும் அறிமுகப்படுத்துவார்.இந்த கிளுகிளுப்பு விருந்துகள் நடப்பதற்காகவே சென்னை அண்ணாசாலையில் ஒரு ஓட்டலை நிரந் தரமாக குத்தகைக்கு எடுத்து வைத்திருந்தார் அன்பு நாதன். அன்புநாதனுக்கு முத்துக்கிருஷ்ணன் என்கிற உதவியாளர் 9282334453 என்கிற அலைபேசி எண் உடைய உதவியாளர் உண்டு. அவர்தான் சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களையும், விளம்பரப் பட மாடல்களையும் அழைத்து வந்து முதலில் அன்புநாதனுக்கும், அதன்பிறகு ஆளுங்கட்சி வி.ஐ.பி.க்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் அறிமுகம் செய்வார்'' என்கிறது வருமான வரித் துறை. இது உண்மையா என அறிய அந்த எண்ணில் கேட்க தொடர்பு கொண்டோம். அந்த எண் ஸ்விட்ச் ஆஃப் என பதில் வருகிறது. வருமானவரித்துறையின் வசம் அந்த எண் சிக்கியதால் முத்துக்கிருஷ்ணன் வேறு எண்ணை மாற்றிக் கொண்டு தனது சேவை யை தொடர்வதாக சினிமாத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


""தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதித்த ஆயிரக்கணக்கான கோடிகளை அன்புநாதன் மூலம் முதலீடு செய்யும் அ.தி.மு.க. வி.ஐ.பி.க் கள் பலர் தமிழ்ப் பெண்களை விரும்புவ தில்லை. அவர்களுக்கு அகில இந்திய மாடல்களைத்தான் பிடிக்கும் என் பது அன்புநாதனுக்குத் தெரியும். அதற்காக மனோஜ் குமார் கார்க் என்ற மும்பை நபரை உபயோகித்தார். இந்த மனோஜ் குமார் கார்க் பெயரில்தான் துபாயில் டெய்ராசிட்டி என்ற இடத்தில் செஞ்சூரியன் ஸ்டார் டவர் என்கிற அடுக்குமாடி கட்டி டத்தை ஓ.பி.க்கும் நத்தத்திற்கும் 1900 கோடி ரூபாய்க்கு அன்புநாதன் வாங்கிக் கொடுத்தார். ஹாங் காங் மற்றும் துபாயில் ஹவாலா மூலம் பணங்களை முதலீடு செய்யும் மனோஜ்குமார் தனது சொந்த ஊரான மும்பைக்கு வி.ஐ.பி.க்களை வரவழைத்தும், மும்பையைச் சேர்ந்த பெண்களை சென்னைக்கு வர வழைத்தும் கிளுகிளுப்பு விருந்து நடத்துவார். சமீ பத்தில் கார்க்கை அன்னியச் செலாவணி அமலாக் கத்துறை மும்பையில் கைது செய்தது. அப்பொழுது அவன் அன்புநாதன் மற்றும் அ.தி.மு.க. வி.ஐ.பி.கள் பற்றிய பல உண்மைகளைக் கக்கியுள்ளான். மும்பையில் மட்டுமல்ல டெல்லியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல்களான ஹயாத், லீலா பேலஸ் போன்றவற்றில் நிரந்தர அறைகளை அன்புநாதன் வைத்திருந்தார்'' என்கிறது வருமான வரித்துறை.அன்புநாதனின் பணமுதலீடு மற்றும் கிளு கிளு நடவடிக்கைகளுக்கு ராமசுப்ரமணி, திரிபாதி, கண்ணன் ஆகிய தமிழகத்தின் உயர் போலீஸ் அதி காரிகள் துணை நின்றனர். அன்புநாதன் வீட்டில் பணம் மற்றும் போலி ஆம்புலன்ஸ் ஆகியவற்றை அப்போது கூடுதல் எஸ்.பி.யாக இருந்த வந்திதா பாண்டே கைப்பற்றினார். அந்த ஆபரேஷனின் போது அன்புநாதனின் குடோனில் இருந்த சி.சி .டி.வி. கேமரா ஒன்றையும் போலீஸ் கைப்பற்றியது. அதை உடனடியாக தன்னிடம் தருமாறு வந்திதா பாண்டேவை அப்பொழுது சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதி தொலை பேசியில் மிரட்டினார் என திரிபாதிக்கும் அன்புநாதனுக்கும் உள்ள தொடர்புகளை வருமான வரித்துறை கண்டுபிடித்திருக்கிறது.போலீஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் ஆதரவுடன் நடந்த அன்புநாதனின் களியாட்டத்தில் சிக்கியவர் மும்பையைச் சேர்ந்த மாடல் ஹின்னுகான். அவரை மும்பையிலிருந்து திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்து நத்தத்துக்கு விருந்தாக்கினார் அன்புநாதன். அதைத் தொடர்ந்து அன்புநாதனின் தொடர் விருந்து வைபவங்களில் மாடலிங் ஹின்னு பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டார்."" "எங்களைப் பற்றி வாய் திறந்தால் உன்னைக் கொலை செய்துவிடுவோம்' என வி.ஐ.பி. கும்பல் மிரட்டி அவரது வாயை மூடிவிட்டது'' என வருமான வரித்துறை தனது ஆவணங்களில் பதிவிட்டுள்ளது. இதுபற்றி நம்மிடம் 9167590611 என்ற எண்ணி லிருந்து பேசிய ஹின்னுகானிடம் அவருக்கும் அன்புநாதனுக்கும் நத்தம் தரப்புக்கும் உள்ள தொடர்பை பற்றிக் கேட்டபோது, ""அவர்களை ஒருமுறை ஒரு விருந்தில் சந்தித்தேன்...'' என்றவர், மற்ற குற்றச்சாட்டுகளை மறுத்தார். மும்பை மாடலுக்கும் நத்தத்திற்கும் விருந்து சந்திப்பில் என்ன நடந்ததோ...? நத்தம் விசுவநாதனை தொடர்புகொண்டு  கேட்டோம்.""பதில் சொல்ல விரும்பவில்லை'' என்றார் அவர்.அன்புநாதன் கிளுகிளுப்பு விருந்து நடத்தி னாரா என ஓ.பி., வைத்திலிங்கம், சைதை துரைசாமி மற்றும் அவர்களது வாரிசுகளைக் கேட்டோம். அவர்களும் அந்த விருந்து பற்றி நம்மிடம் பேச விரும்பவில்லை. வருமானவரித்துறையின் ஆவணங்களில் உள்ள குறிப்புகள் நிறையவே பேசுகின்றன.

-தாமோதரன் பிரகாஷ் விகடன்.com

கருத்துகள் இல்லை: