இந்திய ஆண்கள் தங்களின் சந்தோசத்திற்கு பெண்கள் நிறைய தரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
.It’s as if mainstream Bollywood is still having a hard time believing a normal, good girl can’t be spontaneous in bed, like a normal good girl. It’s a dangerous message to send out because it seems to suggest that when girls say no, they mean yes.”
இந்திய திரைப்படங்களால்,பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் சாதாரண விடயங்களாகப்படுகின்றனவா? 29.1.15ல் லண்டன் கார்டியன் பத்திரிகையில் வெளிவந்த நிர்பால் தலிவால் என்பவரின் கட்டுரையின் சாரம்: அவுஸ்திரேலியாவில், அண்மையில் பாலியல் குற்றச்சாட்டிலிருந்து ஒரு இந்திய செக்கியுரிட்டி கார்ட், அவரது வழக்கறிஞர் முன்வைத்து வாதாடிய மேற்குறிப்பிட்ட கருத்துக்களால் சிறைக்குப் போவதிலிருந்து தப்பியிருக்கிறார். குற்றவாளியாகக் கருதப்பட்டவரின் நடவடிக்கைகளான, தனக்குப் பிடிக்காத பெண்ணைவிடாமற் பின் தொடர்நது திரிவது. தேவையற்ற மோபைல் குறிப்புகளை அனுப்புவது என்பவை இந்தியத் திரைப்படக் கதாநாயர்கள், தனக்குப்புடிக்காத ஒரு பெண்ணை எப்படித் தன் வழிக்குக்கொண்டுவருவது என்ற போர்முலாவுடன் இளைஞர்களின் 'மிகச் சதாரண' பழக்கவழக்கமாகக் காட்டப்படுகிறது
லண்டன் ஆபிரிக்கன் அன்ட் ஓரியன்டல் ஸ்ரடி பல்கலைக்கழகத்தில் இந்திய சினிமா பற்றிய பேராசிரியராகவிருக்கும், றேச்சல் டு;வயர் என்ற பெண்மணி,' இந்தியாவிலிருந்து வெளியாகும் பல படங்களில்,ஒரு ஆணை உதாசீனம் செய்யும் ஒரு பெண்ணை,அந்த ஆண் விடாப்பிடியாகத் தொடர்வதும், அவளையடைய பல விடயங்களை முன்னெடுப்பதும், ஆண்மையைக் காட்டும் விடயங்களாகப் பிரதிபலிக்கப் படுகிறது' என்று சொல்லியிருக்கிறார்..
அவரது 'பொலிவுட் இந்தியா' என்ற புத்தகத்தில் '60ம் ஆண்டில் இந்தியாவில் வெளிவந்த பல பிரபலமான படங்களை உதராணமாக காட்டுகிறார். அந்தக்காலத்துப் பிரபல கதாநாயர்களான, ஷாமி கபூர், அவரது குறும்புத்தனமான (திரைப்படப்) பாலியற் சேட்டைகளுக்குப் பிரபலமானவர்.
அவர் கதாநாயராகவரும் படங்களில்,தன்னை உதாசீனம் செய்யும் கதாநாயகிக்கு முன் பாலியல் குறம்புத்தனம்செய்வார், ஆடிப்பாடுவார் .கால கெதியில் அவரை உதாசீனம் செய்த கதாநாயகி அவரின் காலடியில் விழுவாள்.
இந்தவகையான கதையமைப்புக்களும் கருத்துக்களும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சில படங்கள், இப்படியான கதையமைப்புக்களின் அடுத்த முகத்தையும் காட்டுகின்றன.
1993ல் ஜாஷ் ஷோப்ராவின் நெறியாள்கையில் வெளிவந்த ''டார்- வன்முறையான காதற்கதை' என்ற திரைப்படத்தில். இன்று திரையுலகத்தில் பிரபலமாகவிருக்கும் ஷாருக் கான், மிகவும் காதல் வெறிபடித்த வில்லனாக நடித்தார். இந்தப்படத்தில், சுனில் என்றவருக்க நிச்சயப்படுத்தப்பட்ட கிரான் என்ற பெண்ணைத்தீரமாகக் காதலிக்கிறார். அவரது திறமையான நடிப்பால் பலரைக்கவர்ந்தார். நடிப்புக்கு விருதும் பெற்றார்.
அண்மையில் (2013)தனுஷ் ,நடித்த ரான்ஞ்ஞானா படத்திலும், கதாநாயகன் குண்டன் கதாநாயகி ஷோயாலை விடாமற் காதலிக்கிறார். தனது காதலை விளங்கப்படுத்த அவரின் மணிக்கட்டில் காயத்தை ஏற்படுத்துகிறார். அவளது திருமணத்தைக் குழப்புகிறார். கதாநாயகியன் கணவராக நிச்சயிக்கப்பட்டவர் அடித்துக் கொலை செய்யப் படுகிறார். கடைசியில் குண்டனும்
அடித்துக்கொலை செய்யப்படுகிறார். காதல் வில்லன் குண்டனும் இறக்கிறார். அடுத்த பிறவிலும் அவளைக்காதலிப்பேன் என்று இறக்க முதற் சொல்கிறார். இதெல்லாம் இளைஞர்களின் மனதில் பாரிய விளைவுகளை ஏற்படுத்துபவை.
தங்களுக்கு அப்படியான ஒரு சந்தர்ப்பம் வந்தால் அப்படியே நடந்துகொள்ளலாம் என்று சிந்திக்கப்பண்ணுபவை. இப்படியான படங்கள் யாதார்த்திற்கு அப்பாலான உலகத்தை இளைஞர் இப்படங்கள் மனதில் பதியப்பண்ணுவதால ;'ஈவ் ரீசிங்'- பாலியல் சேட்டைகள் சாதாரணமானவையாக எடுத்துக்கொள்கிறார்கள' என்ற தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்..
டெல்லியைச் சேர்ந்த கனிகாக காஹலட் என்ற ஒரு ஊடகவியலாளர் குறிப்பிடும்போது, 'தற்காலத்து, நவீனத்தமான திரைப்படங்கள் என்று கூறிக்கொள்பவையும் விடாமல் பழைய காதற்கதைகளையே திருப்பித் திருப்பிப் படமாக்குகிறார்கள். உதாரணமாக அண்மையில் வந்த 'ஹப்பி என்டிங்' என்ற படதை;தைப்பார்த்தேன், ரசித்தேன். ஆனால் அந்தப் படத்திலும் நல்ல பெண்கள் செக்ஸை விரும்மாட்டார்கள். ஆண்கள்தான் அதை முன்னெடுக்கவேண்டும் என்ற போர்மியுலாகவே இருக்கிறது.
மேற்கண்ட படம் சுதந்திரமாக வாழும் ஒரு ஜோடியைப்பற்றியது. இதிலும், செக்ஸ் பற்றிய விடயத்தில் பெண்கள் தயக்கமாகவிருக்கம்போது அதை வெற்றி கொளவது ஆண்மையானது என்ற கருத்தே சொல்லப் படுகிறது'.
அவர் தொடர்ந்து சொல்லும்போது, இந்தியத்திரைப்படங்கள் தொடர்ந்தும் ஒரேமாதிரியான கருத்துக்களை, அதாவது, பெண்கள் படுக்கையில் 'இல்லை' என்று சொல்வது 'ஆமாம்' என்பதற்கு அர்த்தம் என்றுதான் பிரதிபலிக்கிறார்கள். இது மிகவும் அபாயமான கருத்தாகும். அதாவது, பெண்கள் 'இது வேண்டாம்' என்பதை 'இது வேண்டும்' என்று ஆண்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற இரட்டைக்கருத்துக்கள் அபாயமான விளைவுகளையே கொண்டுவரும்'.
ஆனால் இந்தியத் திரையுலகம் ஒரு விதத்தில் சமுதாயத்தை அடையாளப்படுத்துகிறது என்பதையும் கருத்திற் கொள்ளவேண்டும். அவர் மேலும் குறிப்பிடும்போது@ 'இந்தியத் திரைப்படக்கதாநாயகர்கள், பெரும்பாலான இந்திய ஆண்களைப் பிரதிபலிக்கிறார்கள். இந்திய ஆண்கள் தங்களின் சந்தோசத்திற்கு இந்தச்சமுதாயம்(பெண்கள்) நிறையத்தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குடும்ப அமைப்பில் அவர்கள்தான் தலைவர்கள், முக்கியமானவர்கள், பெண்கள் அவர்களின்(ஆண்களின்) உடல் உள விருப்பங்களை முற்று முழதாக நிறைவேற்றவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இந்தியப் படவுலகு ஆண்களின் கையிலிருக்கிறது. ஆண்களின் பாத்திரப்படைப்பால், அவர்கள் ஷாருக் கான், அல்லது ஷயிவ் கான், அல்லது அமீர்கானாக இருக்கலாம் இவர்களாற்தான் படங்கள் வெற்றியடைகின்றன. திரையுலகு ஆண்களின் கையிலிருக்கிறது. இந்தியாவில் எதுவுமே ஆண்களின் கைகளிற்தானிருக்கிறது இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்;: thenee.com http://www.theguardian.com/film/filmblog/2015/jan/29/does-bollywood-normalise-stalking

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக