செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

மோகன்லாலை வறுத்து எடுத்த சமுக வலைத்தளங்கள் ! வாங்கிய காசை திருப்பி தர மோகன்லால் சம்மதம்

திருவனந்தபுரம்,பிப்.03 (டி.என்.எஸ்) பிரபல மலையாள நடிகர் மோகன்லால், நடிப்பது மட்டும் இன்றி படம் தயாரிப்பது, படம் வெளியிடுவது என்று சினிமா சம்மந்தமான தொழில்கள் செய்வதோடு, இசை நிகழ்ச்சிகளை நடத்தும் இசைக் குழு ஒன்றையும் நடத்தி வருகிறார்.லலிசம்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் இந்த இசைக் குழு சார்பில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் 35வது தேசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட்டது. ஆனால், இவர்களின் நிகழ்ச்சி மிகவும் மோசமாக இருந்ததாக சமூக வலை தளங்களில் விமர்சனம் எழுந்தது. மோகன்லாலின் பிளாக்கிலும் சமூக வலைதள கணக்கிலும் பலர் தங்கள் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்தனர். கேரள அரசிடமிருந்து நிகழ்ச்சிக்காக வாங்கிய தொகையை திரும்பக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமூக வலைதளம் மூலம் எதிர்ப்பு போராட்டமும் நடைபெற்றது.


இந்த பிரச்சனையால் தான் மிகவும் மனவேதனை அடைந்ததாக தெரிவித்துள்ள நடிகர் மோகன்லால், “நான் நிகழ்ச்சிக்காக வாங்கிய ஒரு கோடியே 63 லட்சத்து 77 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தையும் அரசிடம் திரும்ப கொடுக்க தயாராக இருக்கிறேன். இது அனைத்து சர்ச்சைகளையும் முடிவுக்கு கொண்டுவரும் என நம்புகிறேன்.” என்று தெரிவித்ததோடு, இது குறித்து கேரள அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளார் tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை: