வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

இசை விமர்சனம் : நான் தூன்னு துப்பினாலும் இசைவரும்டா !

சரியாக 10 ஆண்டுகள் கழித்து எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் ரிலீஸாகும் திரைப்படம், அவரே இசையமைத்து நடித்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கிறது இசை. ”நான் ’த்தூ’ என துப்பினாலும் இசை வரும்” என்ற அளவிற்கு தலைக்கணம் பிடித்த இசையமைப்பாளர் சத்யராஜ் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையை கட்டி ஆண்டு வர, அவரிடம் அசிஸ்டண்டாக இருந்த எஸ்.ஜே.சூர்யா சிறந்த பாடல்களைக் கொடுத்து பெரிய இசையமைப்பாளராக வளர்ந்துவிடுகிறார். எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என பொறாமையில் பைத்தியம் பிடித்த மாதிரி ஆகிவிடும் சத்யராஜ் எஸ்.ஜே.சூர்யாவை அழிக்க நினைக்கிறார். அதே சமயம் புதிய இசை ஆல்பத்திற்காக மலைப்பிரதேசத்திற்குச் செல்லும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு அங்கு சாவித்ரியின் அறிமுகம் கிடைக்கிறது.

வழக்கமான எஸ்.ஜே.சூர்யாவின் கிளுகிளுப்பான காதலின் பின் அவர்கள் திருமணம் நடைபெறுகிறது. ’இசையை புடிக்கிறேன்னு காட்டுக்கு போனவன், கல்யாணத்தையும் பன்னிகிட்டு வந்துட்டானே என கடுப்பில் தனது பழிவாங்கல் நடவடிக்கைகளில் வேகமெடுக்கும் சத்யராஜ் வெற்றியும் பெறுகிறார். எஸ்.ஜே.சூர்யாவை சுற்றியுள்ள அனைவரையும் கைக்குள் போட்டுக்கொண்டு சத்யராஜ் அவருக்கு செய்யும் கொடுமைக்கு அளவே இல்லை. ‘நான் பைத்தியம்’ என்று நினைத்துக்கொண்டு தானே சென்று மருத்துவமனையில் படுத்துக்கொள்ளும் அளவிற்கு பாதிக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா எப்படி அதிலிருந்து மீண்டு வருகிறார்? சத்யராஜ் தான் தன் எதிரி என்று கண்டுபிடிக்கிறாரா? போன்ற கேள்விகளுக்கு பதில் க்ளைமேக்ஸில்.  முதலில் பாராட்டப்பட வேண்டிய நபர் சத்யராஜ். அசாத்தியமான நடிப்பில் நம் மனதைக் கவர்ந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பு இது இல்லையே சார். பல வருடங்களாக கோலோச்சி வரும் இசையமைப்பாளர் வீடு புகுந்து அடித்து கொலை செய்யச் சொல்வதும், எப்போதும் சிகரெட்டும் கையுமாக இருப்பதும் ஒத்துஓகலையே சார். ஆனாலும் சத்யராஜ் கஞ்சா கருப்பு காமெடிகள் ஒவ்வொன்றும் அடி தூள் ரகத்தைச் சேர்ந்தவை.எஸ்.ஜே.சூர்யா ஒரு இசையமைப்பாளராக அசத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம். பின்னணி இசையில் கவனம் செலுத்தியிருப்பது மகிழ்ச்சி. 5 நிமிட பாடல் என்றால் வெளியே சென்று வரலாம். ஆனால் பின்னணி இசையில் சொதப்பியிருந்தால் படம் முழுக்க வெளியே நிற்க முடியாதே. ஆனால் ’இசை வீசி..... நீ தேட’ பாடலில் இதயத்தை பறக்க வைத்துவிட்டார் மனுஷன். இசையமைப்பாளராக மேலும் வளர வாழ்த்துக்கள்.


ஹீரோயின் வயிற்றில் கீபோர்ட் வாசிப்பது, கசப்பு மருந்தை ஹீரோயின் வாயால் ஊட்டிவிடுவது என நிறைய எஸ்.ஜே.சூர்யா டச். தன் மனைவிக்கு கருக்கலைப்பு ஏற்படும் சமயம் உட்பட பல இடங்களில் நானும் நடிகன்டா என நிரூபித்துவிடுகிறார் எஸ்.ஜே.சூர்யா. nakkheeran.in

கருத்துகள் இல்லை: