திங்கள், 2 பிப்ரவரி, 2015

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்

புதுடில்லி: 'இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க துாதரக அதிகாரிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சலுகைகளை அனுபவிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்' என, வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய துாதரக அதிகாரி தேவ்யானி, அவர் வீட்டில் பணியாற்றிய பெண்ணுக்கு முறைகேடாக பாஸ்போர்ட் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக தேவ்யானியை விசாரித்த அமெரிக்க போலீசார், அவரின் உடைகளை களைந்து சோதனை நடத்தியது, அப்போது, பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக, இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க துாதரக அதிகாரிகள் அனுபவித்து வந்த சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்தது. என்னதான் மோடி ஒபாமாவை கண்டு  சாயாவாலா பாணியில் டிப்ஸ்ஸுக்காக   வழிந்தாலும் அமெரிக்கர்கள் மற்றவர்களுக்கு எந்த சலுகையும் கொடுப்பதில்லை. அவர்களுக்கும் எந்த சலுகையும் கொடுக்க தேவை இல்லை.


இதன்படி, அமெரிக்க துாதரக அதிகாரிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், விமான நிலையங்களில் வழங்கப்பட்ட பாஸ் ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையும் திரும்ப பெறப்பட்டது. குறிப்பிட்ட சில அதிகாரிகளுக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டது. தற்போது, அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து திரும்பியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு அதிகாரித்துள்ளதாகவும், முன்பு இருந்தது போலவே, அமெரிக்க அதிகாரிகள் அனைவருக்கும் சலுகை வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டிருந்த ஒரு கேள்விக்கு பதில் அளித்துள்ள வெளியுறவு அமைச்சகம், இதை மறுத்துள்ளது.

வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளதாவது:கடந்த, 2014 முதல், அமெரிக்க துாதரக அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட சலுகை, ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்; அதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: