வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

யுத்தத்தை நோக்கி இந்தியா பாகிஸ்தான் நகர்கிறதா? அதிர்ச்சி தரும் தீவிரவாதமும் மோடியின் பதில் வாதமும்?

WASHINGTON: Prime Minister Narendra Modi is likely to use the military option if the next terrorist attack in India is traced back to Pakistan, a former top US diplomat has warned while hoping that the Pakistanis would understand that their past behaviour is unlikely to be tolerated now. வாஷிங்டன்: இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் ஏதேனும் நடத்தப்பட்டால், பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்த பிரதமர் நரேந்திரமோடி திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ராபர்ட் பிளாக்வில் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்னில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள வந்த ராபர்ட் பிளாக்வில் இதுகுறித்து கூறியதாவது: பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தது. அதன்பிறகு எப்போதெல்லாம் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தாலும், பாகிஸ்தான் மீது ராணுவ பலத்தை பிரயோகிக்க இந்திய பிரதமர்கள் யோசித்தது உண்டு. ஆனால் செயல்படுத்தாமல் பின்வாங்கிவிடுவார்கள். இந்தியாவில் தீவிரவாதிகள் வாலாட்டினால் பாக். மீது தாக்குதல் நடத்த மோடி திட்டம்: அமெரிக்க அதிகாரி பரபர ஆனால், இப்போது இந்தியாவின் நிலைப்பாடு வேகமாக மாறியுள்ளது. இப்போதைய பிரதமர் அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் பின்வாங்க மாட்டார் என்று நினைக்கிறேன். இந்தியாவில் ஏதாவது ஒரு பெரிய தீவிரவாத தாக்குதல் நடந்து, அதில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டால், நரேந்திரமோடி, தனது ராணுவத்தை பயன்டுத்தி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. மோடியின் குணநலன் மற்றும் இந்தியாவின் மாறியுள்ள பார்வை ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தால், முந்தைய பிரதமர்களைவிட இந்த விஷயத்தில் இவர் தீவிரமாக இருப்பார் என்றே தெரிகிறது. முந்தைய பிரதமர்களுக்கும், இப்படிப்பட்ட யோசனையை ராணுவ அதிகாரிகள் வழங்கினார்கள். ஆனால் அந்த பிரதமர்கள் ராணுவ அதிகாரிகள் கூறிய யோசனையை ஏற்கவில்லை. இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அணு ஆயுத பலம் கொண்டவை என்பதால், இரு நாடுகளும் மோதுவது ஆபத்தில் முடியும்.
இதை பாகிஸ்தான் புரிந்துகொள்ளும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டின் வெளியுறவு கொள்கைகளுக்கான மூத்த ஆய்வாளர் ஸ்டீபன் சோகென் கூறுகையில், "மும்பை தாக்குதலை போன்ற மோசமான ஒரு தாக்கதல் இனியும் நடக்காது என்று நம்புகிறேன். ஒருவேளை அப்படி நடந்தால், இந்தியாவின் பதிலடி வேறு மாதிரி இருக்கும் என்பது மட்டும் உறுதி. மிக ஆக்ரோஷமான வகையில் பாகிஸ்தானை நோக்கி இந்தியா தாக்குதல் நடத்த தயாராகியுள்ளது. பாகிஸ்தானின் ராணுவ முகாம்களை தகர்ப்பது இந்தியாவின் முதல் இலக்காக இருக்கும்" என்றார்
/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: