வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

இந்தியாவில் வறுமை நிலையில் 30 கோடி பேர்: ஐ.நா., அறிக்கையில் தகவல்

அம்பானியும் அடானியும் பார்த்து எதாவது செய்தால் தான் உண்டு, நாட்டை மறைமுகமாக ஆள்பவர்கள் அவர்கள் தானே.. புதுடில்லி: 'இந்தியாவில், 30 கோடி பேர் மிக மோசமான வறுமை நிலையில் உள்ளனர்' என, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்து உள்ளது.இந்தியாவின் மக்கள் தொகை, 125 கோடிக்கு மேல் உள்ளது. அதனால், வறுமை, பசி, எழுத்தறிவின்மை மற்றும் மோசமான சுகாதார சூழ்நிலை போன்ற பிரச்னைகளில் இருந்து, லட்சக்கணக்கான மக்களை விடுவிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின், 'ஆயிரமாண்டு மேம்பாட்டு இலக்கு' என்ற திட்டத்தை, 2000ம் ஆண்டில், இந்திய அரசு கடைபிடிக்கத் துவங்கியது. இந்தத் திட்டத்தின் கால அளவானது, வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஆனாலும், 'இந்தியாவில், 30 கோடி பேர், இன்னும் மோசமான வறுமை நிலையில் உள்ளனர். கல்வி, சுகாதாரம், குடிதண்ணீர், கழிப்பறை மற்றும் மின்சார வசதி இல்லாமல் உள்ளனர்' என, ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
அந்த 30 கோடி பேருக்கும் ஜாவா, ஆரக்கல், சீ பிலஸ் அப்படீன்னு ஏதாவது சொல்லி கொடுத்து இருந்தா இந்நேரம் அவங்க அமெரிக்காவில் பீட்சா பர்கர் சாப்புட்டுக்கிட்டு ஜாலியா இருந்திருப்பாங்க????


இதுதொடர்பாக, ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான, ஐ.நா., பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் நிர்வாக செயலர் ஷாம்ஷத் அக்தர் கூறியதாவது: ஆயிரமாண்டு மேம்பாட்டு இலக்கை அமல்படுத்துவதில், இந்தியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. வறுமையில் வாடுவோர் எண்ணிக்கையை குறைப்பதில், கணிசமான வெற்றி கண்டுள்ளது. ஆனாலும், அந்த வெற்றி போதுமானதாக இல்லை. உலக மக்கள் தொகையில், ஆறில் ஒரு பங்கை கொண்டது இந்தியா. இந்தியாவால், ஆயிரமாண்டு மேம்பாட்டு இலக்கில், முழுமையான வெற்றி காண முடியவில்லை எனில், வேறு எந்த நாட்டாலும் முடியாது. அத்துடன், வரும், 2030ம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிப்பது என, மீண்டும் இலக்கு நிர்ணயித்தாலும், அதுவும் சவாலான ஒன்றாகவே அமையும். இவ்வாறு, ஷாம்ஷத் அக்தர் கூறினார்.




எட்டு அம்ச திட்டம்:

கடந்த 2000ம் ஆண்டில், ஐ.நா., சபையில் நடைபெற்ற மாநாட்டில், 'ஆயிரமாண்டு மேம்பாட்டு இலக்கு' என்ற, எட்டு அம்ச சர்வதேச மேம்பாட்டு திட்டம் உருவாக்கப்பட்டது. இதில், ஐ.நா.,வின், 189 உறுப்பு நாடுகளும் கையெழுத்திட்டன. இதன்படி, 2015 டிசம்பருக்குள், உலக நாடுகளில் வறுமை மற்றும் பசி கொடுமை ஒழிக்கப்பட வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி கிடைக்க வேண்டும். ஆண், பெண் பாகுபாடு அகற்றப்பட்டு, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: