'அ.தி.மு.க., பொது செயலர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த தண்டனை விதியோ, சதியோ
அல்ல. அவரே தன்னிச்சையாக தேடிக் கொண்டது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி
பதிலடி கொடுத்துள்ளார்.அவரது அறிக்கை:
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், 'என் மீது போடப்பட்ட வழக்கின் தீர்ப்பின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட இடைத்தேர்தல் இது. சதியும், விதியும் இணைந்து செய்த சதிராட்டத்தால், விளைந்திட்ட இடைத்தேர்தல்' என ஜெயலலிதா கூறியிருக்கிறார். நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பை தான், ஜெயலலிதா, இவ்வாறு சதியென்று விமர்சித்திருக்கிறார் என்பதை நீதிமன்றங்கள் தான் கவனிக்க வேண்டும். அவருக்கு கிடைத்த தண்டனை விதியோ, சதியோ அல்ல. அவரே தன்னிச்சையாக தேடிக் கொண்டதே தவிர வேறல்ல. என் உடல்நிலை காரணமாக, நான் நேரடியாக பிரசாரத்திற்கு வர வேண்டாம் என, அன்பழகனும், ஸ்டாலினும் வலியுறுத்தி, தடுத்து விட்டனர். அதனால், நான் ஸ்ரீரங்கம் வரவில்லை. என்றாலும், என் நினைவு முழுவதும் இந்த இடைத்தேர்தல் பற்றி தான் இருக்கும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக