வேலூர் மாவட்டத்தில், போதிய பாதுகாப்பு வசதி இல்லாத
தொழிற்சாலைகளில், வடமாநில தொழிலாளர்கள் பலர், கொத்தடிமைகளாக வேலை செய்து
வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் ஆய்வு
செய்தால், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்.வேலூர்
மாவட்டம், ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில், கடந்த 31ம் தேதி அதிகாலை,
தோல் கழிவுநீர் தொட்டி உடைந்ததில், 10 பேர் பரிதாபமாக இறந்தனர்; அவர்களில்,
ஒன்பது தொழிலாளர்கள், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். வடநாட்டு பணியாலருங்க இல்லையானால் நமக்கு இவ்வளவு அடுக்கு மாடி
குடியிருப்பும் மேம்பாலங்களும் நான்கு வழி 6 வழி புற வழி சாலைகளும் யாரால்
செய்திருக்க முடியும்? உணவை பார்த்தீங்கன்னா வெறும் கோதுமை மாவு மைதா மாவு
தான் ரொட்டி தான் வெங்காயத்தையும் பச்சை மிளகாயினையும் கடிச்சிட்டு
சாப்பிட்டு விட்டு அந்த ஸ்ப்பாட்டிலியே தூக்கம் இயந்திரம் போல வேலை செய்ய
அவர்களால் தான் முடியுது வடநாட்டில் பிழைக்க போதிய வழியில்லாமல் தான் இங்கு
வர்றாங்க அவங்களுக்கு நாம் பாதுகாப்பு செய்து கொடுக்க வேண்டியது அவசியம்
இதுகுறித்து, விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு:ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில், 86 தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன; இவற்றில், 3,500 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில், 1,000க்கும் குறைவானவர்கள் மட்டுமே, நிரந்தர தொழிலாளர்களாக உள்ளனர்; மற்றவர்கள் தினக்கூலி மற்றும் ஒப்பந்த முறையில் வேலை செய்கின்றனர்.மேற்குவங்கம், ஒடிசா, பீகார் போன்ற வடமாநிலங்களில் இருந்து மட்டும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இம்மாவட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். ஆண்டுக்கு ஓரிருமுறை மட்டுமே, சொந்த ஊருக்கு சென்று வருவதாக, அந்த தொழிலாளர்கள் கூறுகின்றனர்.மாநிலம் விட்டு மாநிலம் வருபவர்கள், பணிபுரியும் தொழிற்சாலைகளிலேயே தங்க வைக்கப்படுகின்றனர். இதனால், அங்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படும் சமயங்களில், அதில் சிக்கி உயிரிழப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொழிற்சாலைகளுக்கு அப்பால், தொழிலாளர்களுக்கு என, தனியாக இடம் ஒதுக்கீடு செய்திருந்தாலோ அல்லது வாடகை வீடுகளில் தங்க வைத்திருந்தாலோ, 10 பேர் உயிரிழந்ததை தவிர்த்து இருக்கலாம் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கொடுக்கும் கூலியை பெற்று, சொல்கிற வேலையை செய்வர் என்பதாலும், நிர்வாகத்துக்கு எதிராக கொடி பிடிக்கவோ, கோஷம் போடவோ மாட்டார்கள் என்ற காரணத்துக்காகவும், வெளிமாநில தொழிலாளர்களை தேடிப்பிடித்து, தொழிற்சாலைகளில் வேலை கொடுப்பதாக, தொழிற்சங்க பிரதிநிதிகள் குற்றம்சாட்டுகின்றனர். நாளொன்றுக்கு கூலியாக, 186 ரூபாயை பெற்று, இங்குள்ள தொழிற்சாலைகளில், கொத்தடிமைகள் போல் வேலை செய்வதாக கூறப்படுகின்றன. இதற்காகவே, வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்துவர, ஏஜென்டுகள் பலர் சுற்றித் திரிவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசு, சிறப்பு குழுவை அமைத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு நடத்தினால், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்.

காரணம் இதுதான்:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக