செவ்வாய், 19 மார்ச், 2013

இலங்கையர்கள் தமிழகத்திற்கு செல்லத்தடை உடனடி அமுல்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், தமிழகத்திற்கு செல்வதற்கு, இலங்கையர்களுக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையில், இலங்கையர்களின் பாதுகாப்பிற்காக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த நாட்களில், இலங்கை தேரர்கள், தமிழகத்தில் எல்ரிரிஈ யிற்கு துணைபோகும் சக்திகளால் தாக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்நிலைமையை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரை, இலங்கையர்களுக்கு தமிழகத்திற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விசேடமாக தமிழகமூடாக, யாத்திரை மேற்கொள்வதற்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரிகர்களை அழைத்துச்செல்லும்போது, தமிழகத்தினூடாக செல்வதை உடனடியாக இடைநிறுத்த வேண்டுமென்றும், அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு மாநிலங்களுடாக செல்லுமாறும், வேண்டப்பட்டுள்ளனர். இந்த உத்தரவினை மீறி, யாத்திரிகர்களை அழைத்துசெல்லும் பட்சத்தில், இலங்கையர்களின் பாதுகாப்பு கருதி, சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கோட்டாபய எச்சரிக்கை விடுத்துள்ளார்:  By இலங்கைநெற்

கருத்துகள் இல்லை: