வெள்ளி, 22 மார்ச், 2013

தீக்குளிப்பை ஊக்குவிக்கும் தலைவர்களின் சொத்து பறிமுதல்?

தீக்குளிப்புக்களை ஊக்குவிக்கும் கட்சி தலைவர்களை முதலில் காலவரையறை இன்றி காரா கிரகத்தில் போட  வேண்டும். இந்த லிஸ்டில் முதலில் வருகின்றவர் வைகோதான் எங்கே யாராவது தீக்குளித்து விட்டால் அங்கே சென்று தனது ஆசிட் பேச்சுக்களால் அந்த சுத்த பைத்தியகார நிகழ்ச்சிக்கு ஒரு அரசியல் மற்றும் தியாக அந்தஸ்த்து கொடுத்து விடுவார் . மனித குலமே வெட்கி தலை குனிய வேண்டிய கோழை தனமான தற்கொலை சமாசாரத்தை எதோ சரித்திரத்தில் இடம்பெற போகும் உன்னதமான காரியமாக் உருவகித்து நன்றாக கொம்பு சீவி விடுவார் . அவரின் இந்த குலோரிபிகேசன் glorification  மேலும் பலரை இந்த மாதிரி நாமும் தற்கொலை செய்தால் வரலாற்றில் இடம்பெறலாம் என்று என்ன தூண்டி விடுகிறது .
வாழ்விலே நொந்து போனவர்களுக்கு அடையாளம் இழந்து விட்டோமோ என்ற கவலை இருக்கும் இந்த identity crisis  தமிழகத்தில் தாராளமாகவே உண்டு. கேவலம் வைகோவை திமுக விலத்தி விட்டது என்பதற்காகவே பலர் தீக்குளித்து மாண்டனர் . ஆனால் வைகோ சில வருடங்களிலேயே திமுகவுடன் உறவு வைத்து தந்தையை கண்டேன் தாய்வீடு வந்தேன் , தாய்வீட்டை தகர்க்க யாரையும் அனுமதியேன் என்று உறவு கொண்டாடி நான்கு எம்பி பதவிகளை பெற்ற வரலாறுகள் உண்டு.
 தற்போது இந்த தீக்குழிப்பு என்பதை நூற்றுக்கணக்கான சிறு சிறு குழுக்கள் மறைமுகமாக பிரச்சாரம் செய்து ஊக்குவிக்கின்றன அந்த குழுக்களுக்கு வாழ்வில் நொந்து நொருங்கி போன  யாரோ ஒரு பைத்தியகாரியின் கரியாகிப்போன சடலம் பெரிய விளம்பரத்தை கொடுத்து விடுகிறது 
அதிமுகாவின் வரலாற்றில் தீக்குளிப்பு ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது தீக்குளிப்பு மட்டுமல்ல நாக்கு வெட்டுதல் விரல் வெட்டுதல் இன்னும் என்னனவோ சுய அழிப்புக்கள் எல்லாம் உடனேயே ஜெயலலிதாவின் கவனத்தை பெற்று விடும் அது மட்டுமல்ல அவரோடு கூட இருந்து போட்டோ எடுத்து சேவை மனப்பான்மை கொண்ட எந்த தொண்டனுக்கும் கிடைக்காத விளம்பரம் கிடைத்துவிடும் .
தன்னை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ அழித்து கொண்டவர்களை அருகில் வைத்து பார்த்து ரசித்து புன்னைகைக்கும் காட்சி இருக்கிறதே இடி அமின் கெட்டான் போங்கள்  மனநோயாளர் கூடாரத்தில் இது எல்லாம் சகிச்சுதானே  ஆகணும்.
அவர்களின் தீக்குழிப்பு மேனியா இறுதியில் கும்பகோணம் விவசாய கல்லூரி மாணவிகள் மூன்று பேரை பஸ்சுக்குள் போட்டு உயிரோடு கொழுத்தி அதையும் ஒரு புது போராட்ட வடிவமாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது .
தொண்டர்களை தீக்குளிக்க வைக்க எந்த ரேஞ்சுக்கும் போக தயாரான  பாசிஸ்டுகளை தமிழகத்தில் வளரவிடுவது நல்லதல்ல 
இவர்களை வேடிக்கை பார்க்கும் மத்திய மாநில அரசுகள் தங்கள் தற்காலிக விலைவாசி போன்ற பிரச்சனைகளை திசை திருப்ப இந்தவிதமான உணர்ச்சி கோஷங்கள்  பயன் படும் என்று எண்ணுகின்றனர் .
தீக்குளிப்பை ஊக்குவிக்கும் தலைவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தால்தான் இவர்கள் அடங்குவார்கள் 

கருத்துகள் இல்லை: