சனி, 23 மார்ச், 2013

இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனிடம் இருந்து 11 கார்கள் பறிமுதல்


கிரிகெட் வாரிய தலைவரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவரும் மேலும் சத்யா சாயி அறக்கட்டளையின் அங்கத்தவருமான N சீனிவாசனின் வீட்டில் இருந்து 11 அதி விலை உயரந்த சொகுசு கார்கள் சிபிஐ யினால் பறிமுதல் செய்யப்பட்டது 
 The CBI has seized 11 cars belonging to BCCI chief N Srinivasan for alleged evasion of duty in Chennai, news channel CNN-IBN reported.
கடந்த, 2007ம் ஆண்டிலிருந்து, 2011 வரை, வெளிநாடுகளில் இருந்து, பல நிறுவன தயாரிப்புகளான, 33 சொகுசு கார்களை, சிலர் வாங்கியுள்ளனர். இந்த கார்கள் வாங்கியதில், வரி ஏய்ப்பு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு, பல கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசின் வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தியும், அந்த விசாரணை முறையாக நடக்கவில்லை. அதனால், இந்த விசாரணை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த மூன்று மாதங்களாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், நேற்று முன் தினம், 18 இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் ஒரு பகுதியாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்றதுதான், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சோதனை தொடர்பாக, நேற்று சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது: சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன் தினம் 18 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, 17 வெளிநாட்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வருவாய் புலனாய்வு துறை அதிகாரி, முருகானந்தம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை பரிசீலித்ததில், கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிப்பவருமான, வர்த்தகர் அலெக்ஸ் ஜோசப், கார்கள் இறக்குமதியில், சட்ட விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, சி.பி.ஐ., பிடியில் சிக்காமல் தலைமறைவாக உள்ள அலெக்ஸ் ஜோசப் விரைவில் கைது செய்யப்படுவார். நேற்றும் இதேபோல், சி.பி.ஐ., அதிகாரிகளின் சோதனை தொடர்ந்தது. இந்த சோதனையில், மேலும், 16 கார்கள் கைப்பற்றப்பட்டன. வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரி, முருகானந்தம், வர்த்தகர் அலெக்ஸ் ஜோசப் மற்றும் சில அதிகாரிகள் மீது, இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம், 33 சொகுசு கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில், சில கார்கள் இறக்குமதி செய்ததில், இறக்குமதி விதிகள் மீறப்பட்டுள்ளதால், அரசு, 48 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வரி ஏய்ப்பு குறித்த விபரங்கள் தெரிந்தும், வருவாய் புலனாய்வு துறை அதிகாரி, முருகானந்தம் யார் மீதும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியின் வேந்தர் ஆர்.வெங்கடாசலம் வீட்டிலிருந்து, ஏழு, எம்.ஜி.எம்., குரூப் நிறுவனங்களிடமிருந்து, இரண்டு, ஜான்சன், ஜி.கே.ஷெட்டி ரமணா, ராஜா சங்கர் ஆகியோரிடமிருந்து, எட்டு என, சென்னையில் மட்டும், மொத்தம், 17 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, 16 கார்கள், ஐதராபாத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தனர். இத்தனை சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலும், ஸ்டாலின் மகன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள, விளையாட்டு பயன்பாட்டு வாகனமான, "ஹம்மர்' வாகனத்தை கண்டு பிடிக்க முடியவில்லை என்றும், சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

கருத்துகள் இல்லை: