சனி, 23 மார்ச், 2013

தமிழக அரசு அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு ! ஏன் ஏன் ஏன்?

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அழகிரிக்கு மட்டும், தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு, அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு மதுரை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் போக்கு பிடிக்காமல், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க., வெளியேறியது. அழகிரி உட்பட 5 மத்திய அமைச்சர்கள், தமது அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்தனர். அதையடுத்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பும் விலக்கி கொள்ளப்பட்டது. ஏன் ஏன் ஏன்
விதிவிலக்காக, அழகிரிக்கு மட்டும் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு, மதுரை போலீஸ் கமிஷனருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அழகிரி வீட்டில் வழக்கம் போல் 4 போலீசார், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அழகிரியுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் பாதுகாப்பு போலீசார் உடன்செல்வர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர், “எதற்காக அழகிரிக்கு பாதுகாப்பு தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்ற விபரம் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. தற்போது, தி.மு.க.வில் அழகிரி – ஸ்டாலின் ஆதரவாளர்கள் இடையே மறைமுகமான மோதல் இருப்பதால், அழகிரியின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருக்கலாம்” என்றார்.
அட, அழகிரிமீது தமிழக அரசுக்கு இவ்வளவு அக்கறை இருப்பதாக யாரும் சொல்லவேயில்லையே!
viruvirupu.com/

கருத்துகள் இல்லை: