ஞாயிறு, 17 மார்ச், 2013

Bangladesh இந்துக்கள் மீது தாக்குதல் கோவில்கள் வீடுகள் சூறை

மார்ச் 14- 1971ஆம் ஆண்டு வங்க தேச சுதந்திரத்திற்கு நடை பெற்ற போராட்டத்தின் போது, இந்துக்களுக்கு எதிராக போர்க்குற்றம் புரிந்ததாக ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் துணைத்தலைவர் சயீதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத னைத் தொடர்ந்து பல நாட்களாக நடந்த வன் முறையில் சுமார் 90 பேர் கொல்லப்பட்டனர். அப்போது 16 கோடி மக்கள் தொகை கொண்ட வங்கதேசத்தில் 10 சத விகிதமாக வசிக்கும் இந் துக்களின் மீதும் தாக்கு தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்துக் கள் தாக்கப்படுவது குறித்து பூஜா உஜ்ஜாபன் பரிசத் அமைப்பு கூறியதாவது:- ஜமாத் இ இஸ்லாமி தலைவர் தல்வார் ஹுசைன் சயீதிக்கு மரணதண் டனை விதிக்கப்பட்டதி லிருந்து, 47 இந்துகோ வில்களும், சுமார் 700 இந்துக்களின் வீடுகளும் தீக்கிறையாக்கப்பட்டும், சூறையாடப்பட்டும் உள்ளன. ஜமாத் இ இஸ்லாமி கட்சி மற்றும் அக்கட்சி யின் இளைஞர் பிரிவு ஷிபிர் அமைப்பினர் இந்த தாக்குதலை திட்டமிட்டே நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை அவர் கள் மிக சுதந்திரமாகவே செய்து வருகின்றனர்.   இதிலிருந்து சிறுபான் மையான இந்துக்களை பாதுகாக்க அரசோ, மாவட்ட நிர்வாகமோ அல்லது எம்.பி-யோ முன்வரவில்லை. இவ்வாறு இந்து அமைப்பு கூறியுள்ளது. ஆனால், ஜமாத் இ இஸ்லாமி கட்சி, ஆளும் அவாமி லீக் கட்சியினர் தான் இந்த தாக்குதலை செய்கின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இந்துக்களை பாது காக்க சர்வதேச பொது மன்னிப்பு சபை வேண்டு கோள் விடுத்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள 113 குடும்பங்களுக்கு செஞ்சிலுவை சங்கம் உதவி வருகிறது.

கருத்துகள் இல்லை: