திங்கள், 18 மார்ச், 2013

Jeyamohan: திரைப்பட விருதுகள் இறுதி மூன்றுக்குள் இருந்ததே ஒரு வெற்றிதான்

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்ற இரண்டு நாட்களாகவே செய்திச்சானல்களில் இதைப்பற்றித்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஒழிமுறி நான்கு பரிசுகளுக்கான இறுதிச்சுற்றில் இருக்கிறது என்று செய்தி போட்டுக்கொண்டே இருந்தனர். கடைசியில் லாலுக்கு சிறந்த நடிகருக்கான நடுவர்களின் சிறப்புப் பாராட்டுக்குறிப்பு மட்டுமே கிடைத்தது.
லாலும் மதுபாலும் சற்று ஏமாற்றம் கொண்டிருப்ப்பதாக தெரிகிறது. ஆனால் நேர்த்தியாக கொடுக்கப்படும் விருதுகள்கூட ஒரு குறிப்பிட்ட வகையிலேயே அளிக்கப்படமுடியும். நல்ல படங்களின் ஒரு பட்டியல் உருவாக்கப்படுகிறது. அது குறுக்கப்பட்டு சிறந்த படங்களின் ஒரு சிறிய பட்டியல். அதிலிருந்து மிகச்சிறந்த முதல்படம், மிகசிறந்த இரண்டாவது படம் என்று தேர்வுசெய்யப்படுகிறது
இந்த இறுதிப்பட்டியல் வரை வருவதாக தன் படத்தை எடுப்பதில் மட்டும்தான் இயக்குநர் மற்றும் எழுத்தாளரின் பணி உள்ளது. அதுவே பெரிய கௌரவம். விருதுகள் அதற்கும் மேல் பற்பல சின்னச்சின்ன பரிசீலனைகளுக்கும் இடமளிப்பவை.
செல்லுலாய்ட் ஜெ.சி.டானியேலைப்பற்றி எடுக்கப்பட்டிருப்பதனாலேயே ஒருபடி மேலாக ஆவதை எவரும் ஏதும் செய்துவிடமுடியாது.மேலும் சிறந்த படங்களுக்கிடையே உள்ள தரவேறுபாடு எப்போதும் மிகமிகச்சன்னமானது. அத்துடன் விருதுகள் எப்போதும் சிறந்த படங்களுக்கிடையே பல கோணங்களில் பங்கிடப்படுகின்றன்
மதுபாலிடமும் லாலிடமும் அதையே சொன்னேன். ஒழிமுறி அத்தனை பட்டியல்களில் இறுதி மூன்றுக்குள் இருந்ததே ஒரு வெற்றிதான். அடுத்தமுறையும் மதுபாலும் நானும் அதே பட்டியலில் இருப்போம்.

கருத்துகள் இல்லை: