திங்கள், 18 மார்ச், 2013

BJP கூட்டணியில் விரிசல் நிதிஷ்குமார் 3 வது அணி

பாட்னா: காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் அதனுடன் சேர்ந்து கவிழ்ந்து போவீர்கள் என பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பாஜ தலைவரும் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜ கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நிதிஷ்குமார் முதல்வராகவும், பாஜவை சேர்ந்த சுஷில்குமார் மோடி துணை முதல்வராகவும் இருக்கின்றனர். குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பாஜவில் கோஷம் வலுத்து வருகிறது. இதற்கு பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய ஜனதா தளம், ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட்டை வரவேற்று கருத்து தெரிவித்ததன் மூலம், பாஜவுக்கு வெறுப்பேற்றியது. நேற்று டெல்லியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்க பாஜவுக்கு அழைப்பு விடப்படவில்லை. தொடர்ந்து பாஜவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வரும் ஐக்கிய ஜனதா தளம், வரும் மக்களவை தேர்தலில் பாஜ எதிர்ப்பு கூட்டணியில் அணி சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பீகாரில் தனித்து போட்டியிட தயார் என பாஜ அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜ தலைவரும் பீகார் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல். அந்த கப்பலில் ஏறுபவர்கள் காங்கிரசுடன் சேர்ந்து மூழ்கி விடுவார்கள். நரேந்திரமோடி தலைமையில் 2014 தேர்தலை சந்திக்க மாநில பாஜ தயாராக இருக்கிறது’’ என்றார்.  tamilmurasu.org

கருத்துகள் இல்லை: