கிங்பிஷ்ஷர் ஊழியர்களுக்கும் ஊதியம் கொடுக்காமல் அலைகழித்துவரும் விஜய் மல்லையா, தனது பிறந்தநாளையொட்டி திருப்பதி கோவிலுக்கு 3 கிலோ தங்கக்கட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார்.தனது பிறந்தநாளை திருப்பதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் இன்று எளிய
முறையில் கொண்டாடிய விஜய் மல்லையா கடும் பண நெருக்கடியில் இருக்கும்
கிங்பிஷ்ஷர் நிறுவனத்தின் தலைவராவார்.இவர், தனது பிறந்தநாளையொட்டி திருப்பதி கோவிலின் கர்பக்ராகத்திற்கு மின்னும்
கதவுகள் அமைக்க 3 கிலோ தங்க கட்டிகளை நன்கொடையாக அளித்துள்ளார். அதனை
தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு 15 ஆண்டுகளுக்கு முன் மல்லையா
நன்கொடையாக வழங்கிய "வெங்கட விஜயம்" என்னும் விருந்தினர் மாளிகையில் எளிய
முறையில் பிறந்தநாளை கொண்டாடினார்.
விஜய் மல்லையாவால் 2005 நிறுவப்பட்ட கிங்பிஷ்ஷர் விமான நிறுவனம், ஒரு காலத்தில் உள்நாட்டு விமான சேவையில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. அதன் பிறகு கடும் பண நெருக்கடியை சந்தித்த இந்நிறுவனம், கடந்த அக்டோபர் மாதம் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு சம்பளத்தை நிலுவையில் வைத்திருந்ததால், தொடர்ந்து செயல்படும் உரிமத்தை இழந்தது.>இப்படி சர்ச்சைகளில் கிங்பிஷ்ஷர் விமான நிறுவனம் சிக்கியிருக்கும் நிலையில்,அதன் நிறுவனரான விஜய் மல்லையா கோவிலுக்கு நன்கொடையாக கிலோ கணக்கில் தங்க கட்டிகளை வழங்கியிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகும் என தெரிகிறது.மல்லையா கடந்த மாதம் கர்நாடகா மாநிலத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற முருகன் கோவிலுக்கு 80 இலட்சம் மதிப்பிலான தங்க முலாம் பூசிய கதவுகளை நன்கொடையாக வழங்கினார் என்பது குறிபிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக