சன் டிவி விஷயங்களை அம்பலப்படுத்துவேன் : சக்சேனா ஆவேசம்
சன்
குழுமத்தில் வேலை பார்த்தவரும், சினிமா பட விநியோகஸ்தருமான அய்யப்பன்
நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை
கொடுத்தார். அவருடன் சன் பிக்சர்ஸின் முன்னாள் செயல் அலுவலர் சக்சேனாவும்
வந்திருந்தார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’சன் டிவி
நெட்வொர்க் நிறுவனத்தில் கலாந்திமாறனுக்கு அடுத்த நிலையில் முதன்மை
நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வந்தேன். பொது நிகழ்ச்சிகளில்
கலாந்திமாறன் தலைகாட்டமாட்டார் என்பதால் சினிமா உலகில் பெரும் சக்தியாக
இருந்து வந்தேன். கலாநிதிமாறனுக்காக இரவு, பகலாக உழைத்திருக்கிறேன்.இருவரும்
ஒன்றாக படித்தோம். நண்பன் என நினைத்து பசியும், பட்டினியுமாக கிடந்து 50
ஆயிரம் கோடிக்கு அதிபதி என்று சொல்லும் அளவுக்கு கலாநிதியை கொண்டு
வந்தோம். ஆனால், 10 நிமிடத்தில் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனையை
பூதாகரமாக்கி 79 நாட்கள் என்னை சிறையில் தள்ளி வேடிக்கை பார்த்தார்.
உயிரை கொடுத்து உழைத்த போதிலும் கோடி கோடியாக கொள்ளையடித்து சென்றுவிட்டான் என என் மீது விண் பழி சுமத்தினார். கொள்ளைக்காரர்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.தவறு செய்ததுயார் என்பதை போலீஸ் அதிகாரிகள், பத்திரிகைகாரர்கள் மத்தியில் நான் விவாதிக்க தயாராக இருக்கிறேன். அதற்கு அவர்கள் தயாரா? அரசியல் பலம், பணபலம், ஆள் பலம் இருக்கிறது என்ற மிரட்டல்கள் எத்தனை நாளைக்கு ஓடும்.கலாநிதியின் நிறுவனத்தில் நடந்த விஷயங்கள் அத்தனையும் எனக்குத்தெரியும். அதையெல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன். 3 நாளில் போட்டு தள்ளிவிடுவோம் என ஆட்களை வைத்து மிரட்டல் விடுக்கிறார். நான் தவறு செய்திருந்தால் தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.; அவர்கள் செய்த தவறுக்கு என்ன தண்டனை?தவறு செய்பவர்கள் நீங்கள். தண்டனை அனுபவிப்பது நானா? என்னை குடும்பத்தோடு எரித்துவிடுவேன் என்கிறீர்களே, கலாநிதியின் முகத்திரையை கிழித்தெறிவேன்.சன் டிவி தொடர்பாக பல விஷங்கள் உள்ளன. அவற்றை அடுத்தடுத்து தெரிவிப்பேன்’’ என்று கூறினார்.<

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக