கிருஷ்ணகிரி
மாவட்டம், .சூளகிரி அருகே உள்ள பீரேபாளையத்தை சேர்ந்த திருமணமாகாத
அக்காள், தங்கைகள் இருவர் கடந்த மாதம் கல்லூரி சென்றவர்கள் வீடு
திரும்பாமல் மாயமாகினர்.இவர்கள்
படித்து வந்த கல்லூரியில் முன்பு படித்த வாலிபர் ஒருவருடன் சென்னையில்
பதுங்கியிருப்பதாக சூளகிரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து,
இந்த வழக்கை விசாரித்த சூளகிரி எஸ்.ஐ.,க்கள் பேபி, முருகன் ஆகிய இருவர்
சென்னை சென்று அங்கு தலைமறைவாக இருந்தவர்களை மீட்டுகொண்டு வந்து சகோதரிகள்
இருவரையும் அவர்களது பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.அவர்களை
கடத்தி சென்ற வாலிபர் ஒருவரை கைது செய்த போலீசார் அவரை விசாரணைக்காக
சூளகிரி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது, கைது செய்து அழைந்த
வந்த வாலிபர் காவல் நிலையத்தின் முன்பாக போலிஸ் பிடியிலிருந்து இருந்து
தப்பி ஒடினர். <சாலையை
கடந்த வேகமாக ஓடிய அந்த நபர் எதிரில் வந்துகொண்டிருந்த லாரியை கவனிக்காமல்
சாலையை கடந்து ஒடியிள்ளார். அப்போது, எதிரே வந்த லாரி மோதி அவர் அந்த
இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னையிலிருந்து விசாரணைக்காக அவரை அழைத்து வந்து வழக்கை விசாரித்த எஸ்.ஐ., க்கள் பேபி, முருகன் ஆகிய இருவர் மீதும், கைது செய்து கூட்டிவந்த கைதியை தப்பவிட்டது தொடர்பாக துறைவாரியான விசாரணை நடத்தது.தற்போது அந்த விசாரணை முடிந்த நிலையில் இருவரையும் "சஸ்பெண்ட்' செய்து, 16.12.2012 அன்று சேலம் சரக டி.ஐ.ஜி., சஞ்சய்குமார் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் போலீஸார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக