செவ்வாய், 18 டிசம்பர், 2012

Delhi Bus Rape குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வேண்டும்: சுஷ்மா

ஓடும் பஸ்சில் மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசினார். அவர், ‘’இதை போன்ற சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்க வார்த்தைகள் மட்டும் போதாது கற்பழிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், இருப்பதும் இறப்பதும் ஒன்றுதான். அந்த பெண்ணின் உடல் காயங்கள் ஆறிப் போனாலும், மனக்காயங்களினால் அவள் நடைப்பிணமாக தான் வாழ முடியும்.மத்திய அரசும், டெல்லி முதல் மந்திரியும் இதை போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்? என்பதை இந்த அவையில் தெரிவிக்க வேண்டும். இரவு நேரங்களில் தனியாக வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்பது போன்ற அறிவுரையை தான் அரசு வழங்குகின்றது.தங்களிள் குடும்பத்தை காப்பாற்றும் எண்ணத்தில், கால் சென்டர்களில் வேலை செய்துவிட்டு, நள்ளிரவு நேரங்களில் வீடு திரும்பும், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்களின் கதி என்ன? ஆண் நண்பர் ஒருவரின் துணையுடன் இரவு 9.30 மணிக்கு பஸ்சில் பயணித்த மாணவிக்கு இந்த நிலை ஏற்பட்டிருப்பதை நாம் அனைவரும் கண்டிப்பதுடன் நிறுத்தி விடக்கூடாது.குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடித்து, கடுமையாக தண்டிக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்’’ என்று பேசினார்<

கருத்துகள் இல்லை: