புதன், 19 டிசம்பர், 2012

தமிழகத்திலும் மத்திய அரசின் உங்கள் பணம் உங்கள் கையில்

மாணவர் ஊக்கத்தொகை, முதியோர் பென்ஷன் உட்பட, 39 திட்டங்களுக்கான உதவித் தொகை வழங்கும், உங்கள் கையில் உங்கள் பணம்' திட்டம், அடுத்த ஆண்டு இறுதிக்குள், நாடு முழுவதும் அமல் படுத்தப்படும்; தமிழகமும் இதில் சேர்க் கப்படும் ,'' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
தமிழக சட்டசபை, முன்னாள் சபா நாயகர், செல்லபாண்டியன் நூற்றாண்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில், மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது: மத்திய அரசு வழங்கும் ஊக்கத் தொகை, முதியோர் பென்ஷன் உட்பட, 39 திட்டங்களுக்கான, உதவி தொகை, "உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டத்தின் மூலம், அவரவர் வங்கிக் கணக்கில் சேர்ப்பதற்கு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டம், முதல் கட்டமாக, நாடு முழுவதும், 51 மாவட்டங்களில் செயல் படுத்தப்பட உள்ளது. தேர்தல் நடப்ப தால், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில், எட்டு மாவட் டங்களை தவிர, 43 மாவட்டங்களில், இத்திட்டம், வரும் ஜனவரி, 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.

இதுகுறித்து, மாநில அரசுகளுடன் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இத் திட்டத்தில், தமிழக மாவட்டங்களும் விரைவில் சேர்க்கப்படும். அடுத்த ஆண்டு இறுதிக்குள், நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தால், அரசு வழங்கும் பணம், அடுத்த விநாடியே, உரியவரின் வங்கிக் கணக்கிற்கு சென்று விடும்.
- இவ்வாறு, சிதம்பரம் கூறினார்.

கருத்துகள் இல்லை: