புதன், 19 டிசம்பர், 2012

நடிகர் சிவகுமார் பெரியார் தொண்டன் காலில் விழ வேண்டாம்

sivakumar
‘வயித்தில வந்த கட்டி கேன்சரா இல்லையா என்று பரிசோதனை செய்து கொள்ளும்போது எப்படிபட்ட நாத்திகனும், அது கேன்சர் கட்டியா இருக்கக் கூடாது என்று கடவுளை கும்பிடுவான். அப்படிப் பட்டவர்கள் இல்லை என்றால் என்னிடம் அழைத்து வாருங்கள் நான் அவர்கள் காலில் விழுகிறேன்’ என்று நடிகர் சிவகுமார் சவாலாக சொல்லியிருக்கிறாரே?
-ச. ராமச்சந்திரன், உடுமலை.
அப்போ கடவுள கும்பிடுகிறவர்கள் எல்லாம் வயித்தில கேன்சர் கட்டி பரிசோதனை செஞ்சிக்கிட்டவங்களா?
கடவுள் மறுப்புக் கருத்தை வரட்டுத் தனமாக புரிந்து கொள்வதினால் வருகிற குழப்பம் இது.
தந்தை பெரியாருக்கு நாக்கில் புற்றுநோய் வந்தது, ‘அவர் கடவுளை திட்டியதால்தான் வந்தது’ என்று சிவகுமார் போன்ற சிந்தனை உள்ளவர்கள் அப்போது பற்ற வைத்தார்கள்.
பெரியார் அதன் பிறகுதான் மிகக் கடுமையாக கடவுள் மறுப்புக் கருத்தை பேசினார். புற்றுநோயையும் வெற்றிக் கண்டார்.
பெரியாரை போல், பல தோழர்கள் அதே வீரியத்தோடு இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களை என்னால் காட்ட முடியும்.
அவர்கள் காலில் எல்லாம் சிவகுமார் விழ வேண்டியதில்லை. ஏனென்றால் காலில் விழுவதை பெரியார் தொண்டர்கள், கடவுளை வழிபடுவதை விடவும் இழிவாக கருதுவார்கள்.  mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை: