டெல்லி மருத்துவ கல்லூரி மாணவியை கற்பழித்து, தூக்கி வீசிய 6 பேரை டெல்லி போலீசார் தொலைதொடர்பு உதவியுடன் வளைத்து பிடித்துள்ளனர்.இரவு நேரத்தில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்டு வீசப்பட்ட சம்பவத்தில் 24 மணி நேரத்தில் காவல்துறையினர் முக்கியக் குற்றவாளிகளை கண்டறிந்துள்ளனர்.தலைநகரில் நள்ளிரவில் நடந்த பயங்கரத்தின் வீடியோ, தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் உதவியோடு குற்றம் நிகழ்ந்த தனியார் பேருந்தை கண்டறிந்துள்ளனர் போலீசார். விசாரணையின் தகவல் அறிக்கையின்படி, சிசிடிவி கேமரா மூலம் சம்பவம் நடந்த இடத்தையும் நேரத்தையும் யூகித்து, பேருந்து எங்கிருந்து புறப்பட்டது? என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் அந்த பேருந்து, விடுமுறை தினங்களில் தனியார் போக்குவரத்தாக பயன்படுத்தப்படுகின்றது.இதன் உரிமையாளர்கள் ராம் சிங், இவரே அந்த பேருந்தை சம்பத்தின் போது ஓட்டியுள்ளார். தனது தம்பியுடன் முன்ரிக்கா என்ற பகுதியிலிருந்து, பாலாம் என்ற பகுதிக்கு பேருந்து சரியாக இரவு 9.15 மணிக்கு புறப்பட்டது. வழியில் ஒரு சில பயணிகளோடு பேருந்து சென்ற கொண்டிருந்தது.
9.45 மணியளவில் மாணவி தனது நன்பருடன் விடுமுறை நாளில் சாகெட் என்ற பிரபல திரையரங்கிலிருந்து படம் பார்த்து திரும்ப, இந்த தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். அந்த சமயம் பேருந்தில் டிரைவர் ராம் சிங், சகோதரர் யோகேஷ் சிங் மற்றும் நான்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. தனியாக இளம் மாணவி சிக்கிய நிலையில், உடன் இருந்த நண்பரை அடித்து துன்புறுத்த தொடங்கிய நான்கு பேரும் பேருந்தின் உடைந்த கம்பிகளை கொண்டு பலமாக அடித்துள்ளனர். இதனை தடுக்க வந்த மாணவியையும் அடித்து கீழே தள்ளி கற்பழித்துள்ளனர். இந்த கொடூரம் நடக்கையில் பேருந்தின் உரிமையாளர்கள் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். பேருந்து மஹிபல்பூர் மேம்பாலத்தை நோக்கி செல்லும் போது மாணவியையும் அவரது நண்பரையும் இரும்பு கம்பிகளால் அடித்து வெளியே வீசியுள்ளனர். விசாரணையின் போது இந்த மேம்பாலத்தின் நடுவே பொருத்தப்பட்டிருந்த கேமராவின் மூலம் பேருந்தை அடையாளம் கண்ட காவல்துறையினர் பேருந்தின் உரிமையாளர்களை பிடித்து விசாரணை தொடங்கினர். அவர்களின் செல்போன்களை கைப்பற்றினர். இதனை அடுத்து நான்கு பேர் ஏறிய இடம் மற்றும் அவர்களின் தொலைத்தொடர்புகளை கண்காணித்த காவல்துறையினர், அவர்களை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நான்கு பேரும், தெற்கு டெல்லி பகுதியில் உள்ள ஆர்.கே.புரம் குடிசைப் பகுதி ஆட்கள் என்று டெல்லி போலீஸ் கமிஷன் நீரஜ்குமார் கூறியுள்ளார்.இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேற்று பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, தற்போது அபாயகரமான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், அவரது அடிவயிற்றுப் பகுதி சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி உத்தரகாண்டை சேர்ந்தவர், டெல்லிக்கு வேலை தேடி வந்தவர் என்று தெரிய வந்துள்ளது. மாணவியின் பெயர் வெளியிடப்படாத நிலையில் அவர் இன்னும் அபாயகட்டத்தை தாண்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு வயிறு மற்றும் குடல் பகுதிகளில் கடுமையான காயங்கள் உள்ளதாகவும், அவருக்கு செயற்கை சுவாசமே அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். tamil.webdunia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக