பெங்களரு
நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கில்
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் 2வது நாளாக நீதிபதி
கேள்வி கேட்டார். அப்போது, ஜெயா பப்ளிகேஷனில் பங்குதாரரானது
எப்படி என்று கேள்வி எழுப்பினார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை நடத்தி வந்த நீதிபதி மல்லிகார்ஜுனையா ஓய்வு பெற்றதை அடுத்து புதிய நீதிபதி பாலகிருஷ்ணா விசாரணையை தொடங்கியுள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த வழக்கு விசாரணை கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. அப்போது சசிகலா நேரில் ஆஜரானார்.
அப்போது, இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்டு பயன்படுத்தப்படாத ஆவணங்கள் மற்றும் பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கோரி சசிகலா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது. அப்போது சசிகலா நேரில் ஆஜராகி, நீதிபதி பாலகிருஷ்ணா கேட்ட 110 கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இன்று 2வது நாளாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ஜெயா பப்ளிகேஷனில் பங்குதாரராக ஆனது எப்படி? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு சசிகலா பதில் அளித்தார்.
இன்று மதியம் வரை மொத்தம் 742 கேள்விகளுக்கு சசிகலா பதில் அளித்துள்ளார். அவரது பதில்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக