புதுடில்லி: நேரடி மானிய தொகை வழங்கும் ‘உங்கள் பணம் உங்களை கையில்’
திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது
தொடர்பாக பிரதமர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.. இதில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
வரப்போகும் 2014-ம் ஆண்டு பார்லிமென்ட் லோக்சபா தேர்தலை குறி வைத்து , மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு நேரடி மானிய தொகையினை வழங்கிட முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு (2013) ஜனவரியில் இத்திட்டத்தை நிறைவேற்றிட பிரதமர் மற்றும் மத்திய அமைச்சகங்கள் சுறுசுறுப்பு காட்டி வருகின்றன. வழக்கம்போல ஆளுங்கட்சி செய்வதை எல்லாம் எதிர்க்கவேண்டும் இன்று கூச்சல் அரசியல் நடத்தாமல் இந்த திட்டத்தை சகல கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் .இது இடைத்தரகர்களின் சுரண்டலுக்கு பெரிதும் முடிவு கட்டும் மக்களின் கையில் நுகர்வு சக்தியை அதிகரிக்கும்
இதற்கான மானிய தொகையினை பணமாக பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கும் ‘‘உங்கள் பணம் உங்கள் கையில்’’ என்ற பெயரில் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆதார் அடையாளஅட்டை வைத்துள்ள அனைவரும் வங்கி கணக்கு துவங்கிட நிதி அமைச்சகம் உத்தரவிட்டது. இதன்மூலம், 40 கோடி ஏழைகள் பயன் பெறுவர் என்றும், அரசு அறிவித்துள்ளது.இத்திட்டத்தை முதல்கட்டமாக 51 மாவட்டங்களில் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் வழங்க உள்ளது. தற்போது குஜராத் சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில் இம்மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களை தவிர்த்து எஞ்சிய மாவட்டங்களில் நிறைவேற்ற பிரதமர் சுறு சுறுப்பு காட்டி வருகிறார்.
பிரதமர் தலைமையில் கூட்டம்
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் இன்று பல்வேறு துறை மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது. இக்கூட்டம் தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், உங்கள் பணம் உங்கள் கையில் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் முதற்கட்டமாக 31 மாவட்டங்களில் 2013-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியன்று செயல்படுத்தவும் எஞ்சிய மாவட்டங்களுக்கு ஜனவரி 10-ம் தேதி செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட உள்ளது. 2013-ம் ஆண்டு டிசம்பருக்குள் நிறைவேற்றிட முனைப்பு காட்டி வருகிறது. 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக வாக்காளர்களை ஏமாற்றும் செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்நிலையில் இத்திட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம் விரிவான தகவல் பெற திட்டக்கமிஷன் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக முக்கிய முடிவுகள் எடுக்க பிரதமர் தலைமையில் இன்று நடக்க உள்ள கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டெக்சிங் அலுவாலியா உள்ளிட்டோர் பங்கேற்கி்ன்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. dinamalar.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக