சனி, 1 டிசம்பர், 2012

தமிழகம் முதலிடம்.. டெங்கு, சிக்-குன் குனியா பலியில்

""டெங்கு மற்றும் சிக்-குன் குனியா காய்ச்சல் பாதிப்புகள், தென் மாநிலங்களில் தான், அதிகமாக உள்ளன. இந்த காய்ச்சல்களுக்கு, தமிழகத்தில் அதிகபட்சமாக, 60 பேர் உயிரிழந்துள்ளனர். இக்காய்ச்சல்களுக்கான, தடுப்பு மருந்து இல்லாததால், மத்திய, மாநில அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்,'' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத் கூறினார். தமிழகத்தில் 60 பேர் : டெங்கு மற்றும் சிக்-குன் குனியா காய்ச்சல்கள் தொடர்பாக, லோக்சபாவில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது நடைபெற்ற விவாதத்துக்கு, பதில் அளித்த, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:
டெங்கு மற்றும் சிக்-குன் குனியா காய்ச்சல்கள், நாட்டில் பல மாநில மக்களை ஆட்டிப் படைக்கின்றன. தென் மாநிலங்களில், இந்த நோய்களின் பாதிப்பு அதிகமாக உள்ளது; தமிழகத்தில் தான் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.  http://www.dinamalar.com/

Sentamil karthik - NamakkaL to ChennaI,இந்தியா

Sentamil karthik அதிமுக அடிமைகளே இப்போதாவது நம்புகிறீர்களா ??? தமிழக அரசு உண்மையாலும் தகுந்த நடவடிக்கை எடுக்க வில்லை என்று ... அரசு அறிவிப்பு உண்மை, ஆனால அவை மக்களை வந்து சேர்வதில்லை .. உண்மையாலும் சொல்கிறேன் சென்னை மாநகராட்சி ரொம்ப மோசம் , ரொம்ப ரொம்ப மோசம்.. குப்பைகளை அல்லாமல் அப்படியே போட்டு விடுகின்றனர் , அப்பறம் நோய் வராமல் என்ன வரும் ?? இதிலே மர்ம காய்ச்சலால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை சொல்லப்பட வில்லை , அது மர்ம காய்ச்சல் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. அதுவும் இதுபோல டெங்கு காய்ச்சல் தான் , ஆனால் சரியாக நடவடிக்கை எடுக்காததால் உண்மை மறைக்க பட்டு தவறாக கணக்கு காட்டியுள்ளனர் நமது தமிழக ஆட்கள் ... என்னத்த சொல்ல ?? இனியாவது துரித நடவடிக்கை எடுப்பார்களா ???
டெங்கு மற்றும் சிக்-குன் குனியா காய்ச்சல்களுக்கு, தமிழகத்தில், இந்த ஆண்டு, 60 பேர் உயிரிழந்து உள்ளனர்.தமிழகத்துக்கு அடுத்ததாக, மகாராஷ்டிராவில், 59; கர்நாடாகாவில், 21; கேரளாவில், 13; பஞ்சாபில், 15; மேற்கு வங்கத்தில், 9; ஒடிசா மற்றும் மத்திய பிரதேசத்தில், தலா ஆறு பேர்; டில்லியில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.


மத்திய சுகாதார துறை கணக்குப்படி, இந்த காய்ச்சல்களின் பாதிப்பு, தென் மாநிலங்களில் அதிகம். கடந்த மாதம் சென்னையில், இந்த பிரச்னைக்காகவே சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. தென் மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட, அந்த ஆலோசனை கூட்டத்தில், இந்த காய்ச்சல்களின் பாதிப்புகளை கட்டுப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.கண்ட இடங்களில், தண்ணீர் தேங்குவதை தவிர்ப்பது, கொசு உற்பத்தியை ஒழிப்பது போன்ற எல்லா நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டன.


தடுப்பு மருந்து இல்லை:

டெங்கு மற்றும் சிக்-குன் குனியா காய்ச்சல், சர்வதேச அளவில் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த நோய்க்கு, இன்னும் தடுப்பு மருந்து, கண்டுபிடிக்கப்படவில்லை. உலக நாடுகள் எல்லாமே, இந்த நோய்களை கட்டுப்படுத்துவது எப்படி என, தீவிர யோசனையில் உள்ளன. இந்த காய்ச்சல்களுக்கு, தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் ஆய்வில், பல நாடுகள் தீவிரமாக உள்ள நிலையில், பிரான்ஸ் நிறுவனம் ஒன்று, ஒரு மருந்தை கண்டு பிடித்துள்ளது. அந்த மருந்தும், மூன்றாம் கட்ட ஆய்வு நிலையிலேயே உள்ளது. அதை எப்படியும், வெற்றிகரமான தடுப்பு மருந்தாக மாற்றிக் காட்ட, வல்லுனர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.இந்தியாவில் பெங்களூரு, கோல்கட்டா மற்றும் லூதியானா நகரங்களிலும், இந்த காய்ச்சல்களுக்கான தடுப்பூசி மருந்து கண்டு பிடிக்கும் ஆய்வுகள் நடக்கின்றன. இந்த ஆய்வுகள் எல்லாம், வெற்றிகரமான முடிவுகளை அளித்தால், டெங்கு மற்றும் சிக்-குன் குனியாவுக்கு மருந்து தயாராகி விடும்.

ரூ.2,000 கோடி ஒதுக்கீடு:


அதேநேரத்தில், இந்த நோய்களை உருவாக்கும் கொசுக்கள் உற்பத்தியை, கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இதற்காவே, 2009ல் ஒரு திட்டம் தீட்டப்பட்டு, அதற்கு, மத்திய அரசு, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.நானே, 2003ல் சிக்-குன் குனியா நோய் பாதிப்புக்கு ஆளானேன். எனவே, அதன் பாதிப்புகள் எனக்கு தெரியும். இந்த பிரச்னையில், அரசுடன், தொண்டுநிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என, எல்லா தரப்புமே ஒத்துழைத்தால், உறுதியான தீர்வு காண முடியும்.இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.

அ.தி.மு.க., - தி.மு.க., எம்.பி.,க்கள் "ஆப்சென்ட்' :


டெங்கு மற்றும் சிக்-குன் குனியா காய்ச்சல் பாதிப்பில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருந்தாலும், இது தொடர்பான, கவன ஈர்ப்பு தீர்மானத்தை, லோக்சபாவில், உறுப்பினர்கள், மேகுவால் - பா.ஜ., சைலேந்திர யாதவ் - சமாஜ்வாதி, நமோ நாகேஷ்வரராவ் - தெலுங்கு தேசம், ஆகியோர் தான் கொண்டு வந்தனர்.தீர்மானம் மீது விவாதம் நடைபெற்ற போது, தமிழகத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., - தி.மு.க., எம்.பி.,க்கள் ஒருவர் கூட, சபையில் இல்லை. இ.கம்யூ., கட்சி, தென்காசி தொகுதி, எம்.பி., லிங்கம், விடுதலை சிறுத்தை கட்சி, சிதம்பரம் தொகுதி, எம்.பி., திருமாவளவன் என, இரு தமிழக எம்.பி.,க்கள் மட்டுமே, சபையில் இருந்தனர்.
-நமது டில்லி நிருபர்-

கருத்துகள் இல்லை: