சனி, 1 டிசம்பர், 2012

கருணாநிதி பதவி விலக வேண்டுமென்று அறிக்கை விட்டிருப்பாரே

தேமுதிக எம்.எல்.ஏ. கைது- பிணவறையிலா பேச்சு சுதந்திரம்: கருணாநிதி ஆவேசம்


சென்னை: தேமுதிகவின் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. பார்த்திபன் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் தமிழகத்தில் பிணவறையிலான பேச்சு சுதந்திரம் இருக்கிறது? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணாநிதி வெளியிட்ட கேள்வி- பதில் பாணியிலான இன்றைய அறிக்கையில் இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
பிணவறையில் பேச்சு சுதந்திரம்
கேள்வி: முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ. உட்பட எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாக நேற்றைய ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?
பதில்: இது என்ன ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா? முதல்வர் குறித்து யாருமே பேசக் கூடாதா? பேசினாலே அவதூறாகப் பேசியதாக வழக்கா? தலைவாசலில் தேமுதிக சார்பில் கூட்டம் நடைபெற்று எம்.எல்.ஏ உட்பட 8 பேர் பேசியிருக்கின்றனர். அந்தக் கூட்ட மேடைக்கே தலைவாசல் ஒன்றிய அதிமுக மாணவர் அணிச் செயலாளர் தலைமையில் அதிமுகவினர் சென்று, போலீசாரிடம் கூறி, கூட்டத்தை நிறுத்தச் சொல்லியிருக்கின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளனர். அதன் பின்னர் காவல்நிலையத்தில் புகார் கூறியதன் பேரில் முதல்வர் மீது அவதூறாகப் பேசியதாக வழக்கு பதிவு செய்து, கைது செய்யும் முயற்சியிலே ஈடுபட்டனர். அவதூறாகப் பேசினார்கள் என்று அதிமுகவினர் புகார் கூறினாலே போதுமா? அவர்களின் பேச்சு பதிவு செய்யப்பட வேண்டாமா? அது பற்றி அரசு வழக்கறிஞர்களிடம் கருத்து அறிய வேண்டாமா?http://tamil.oneindia.in/

அது மாத்திரம் அல்ல.. இதனைக் கண்டித்து தேமுதிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்காக 2 நாட்களுக்கு முன் நள்ளிரவு 12.30 மணிக்கு எம்.எல்.ஏ. பார்த்திபன் வீட்டை முற்றுகையிட்டு தேடியிருக்கின்றனர். அப்போது அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருந்த எம்.எல்.ஏ., அடுத்த நாள் பகல் 12 மணிக்கு வந்த போது அதுவரை காத்திருந்து கைது செய்து சிறையிலே அடைத்திருக்கின்றனர். மறியலில் ஈடுபட்ட மற்ற தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களை தேடுவதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாம். இது எங்கே போய் முடியப் போகிறது? பேச்சு சுதந்திரம் பிணவறைக்கே போய்விட்டத? என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அண்ணாவை மறைத்த ஜெயலலிதா
கேள்வி: சட்டப்பேரவை வைரவிழாவில் ஜெயலலிதா உரை எப்படி?

பதில்: அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழ்நாடு முதல் அமைச்சராகவும் இருக்கிற ஜெயலலிதா ஆற்றிய உரையில் தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றை சாங்கோபாங்கமாக விவரித்தார். ஆனால் 1968ஆம் ஆண்டு சென்னை சட்டமன்றம், தமிழ்நாடு சட்டமன்றமாக பெயர் மாற்றப்பட்டது என்று விவரித்த அம்மையார், அந்தப் பெயர் மாற்றத்தைக் கொண்டுவந்து தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது அறிஞர் அண்ணாதான் என்பதை சொல்ல மறந்து விட்டாரா அல்லது சொல்லக் கூடாது என்று விட்டு விட்டாரா என்று தெரிய வில்லை.
கேள்வி:- சட்டமன்ற வைர விழாவில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய முதலமைச்சர் யார் என்று சொல்லாவிட்டாலும், அதே விழாவில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பேச்சு எப்படி?

பதில்: என்ன இருந்தாலும் குடியரசுத் தலைவர் பண்புள்ள தலைவர் - அண்ணாவை முழுமையாக அறிந்தவர் அல்லவா? அதனால் தான் அவர் பேசும்போது தமிழ்நாடு என்று அண்ணாதான் பெயர் சூட்டினார் என்பதை மறவாமல் அவருடைய நீண்ட உரையிலே குறிப்பிட்டார்.

கேள்வி: சட்டமன்ற விழாவில் உரையாற்றிய கவர்னர் ரோசையா, தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சராக வீற்றிருந்தவர்களின் பெயர்களையெல்லாம் வரிசைப்படுத்திச் சொன்னார். ஆனால் உங்கள் பெயரை மாத்திரம் விட்டு விட்டாரே? "யாருக்காவது" பயந்து அப்படி விட்டுவிட்டாரா?

பதில்: அவர் நல்ல மனிதர். எதற்கும் பயப்படாதவர். வேண்டும் என்று விட்டிருக்கமாட்டார்.

விவசாயிகள் தற்கொலை
கேள்வி: அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை நீடிக்கிறதே?

பதில்: விவசாயத்திற்குத் தண்ணீர் இல்லை; பம்ப் செட்டுக்கு மின்சாரம் இல்லை; விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்த்திட ஆட்சியாளர்கள் முன் வரவில்லை; வேதனை - விரக்தியின் விளிம்பிலே விவசாயிகள்! தி.மு.க. ஆட்சியிலே இருந்தால், உடனடியாக கருணாநிதி பதவி விலக வேண்டுமென்று அறிக்கை விட்டிருப்பாரே, இப்போது விவசாயிகள் தற்கொலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என்று கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: