வியாழன், 29 நவம்பர், 2012

விஜயகாந்த்: ஏழு பேரை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில்,  ‘’சேலம் மாவட்டம் தலைவாசலில் நடந்த தே.மு.தி.க., பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க.,வினர் ரகளையில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.,வினர் அளித்த பொய்புகாரின் பேரில், தே.மு.தி.க., மாநில துணை செயலாளர் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்கள் பார்த்திபன், மோகன்ராஜ், சுபா, மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 25 பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.< காவல் துறையினர், எம்.எல்.ஏ., பார்த்திபன், மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.;ஜனநாயகத்தில் ஆளும்கட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பதுதான் எதிர்கட்சியின் செயலாகும். தே.மு.தி.க.,வை பொறுத்தவரை, பொய்வழக்குகளை கண்டு அஞ்சவில்லை. சட்ட ரீதியாக இந்த வழக்குகளை சந்திக்க தயாராகவுள்ளோம்’’என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: