புதுடில்லி: "தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடு சரியில்லை எனில், அவர்களை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும் உரிமை, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல் மூலம், வாக்காளர்களுக்கு கிடைக்கிறது. எனவே, மக்கள் பிரதிநிதிகளை நிராகரிக்கும் நடைமுறை தேவையில்லை' என, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறினார்.
தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறியதாவது: எம்.எல்.ஏ., - எம்.பி., போன்ற மக்கள் பிரதிநிதிகளை, அவர்களின் செயல்பாடுகள் சரியில்லை எனில், உடனடியாக பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என, ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நடைமுறைக்கு சரியாக வராது. தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை நிராகரிக்கும் உரிமை, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் மூலமாக வாக்காளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக புதிதாக ஒரு நடைமுறை தேவையில்லை.
பதவிக் காலம் முடிவடைவதற்கு முன், பதவியில் இருந்து நீக்கும் நடைமுறையை கொண்டு வந்தால், அரசியலில் நிலையற்ற போக்கு ஏற்படும். அடிக்கடி தேர்தல் நடப்பதற்கு வழி வகுக்கும். ஒவ்வொரு எம்.பி., - எம்.எல்.ஏ.,வும் இதைப் பற்றியே, யோசித்துக் கொண்டிருப்பர். அவர்களால் திருப்தியான முறையில், நிம்மதியாக பணியாற்ற முடியாது.
அதேபோல், மக்கள் பிரதிநிதியை பதவியில் இருந்து நீக்குவதற்கு எத்தனை பேர், மனு அளிக்க வேண்டும் என்ற குழப்பமும் ஏற்படும்.
ஒருவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு, அவர் தேர்தலில் பெற்ற மொத்த ஓட்டுகளுக்கு, சற்றும் குறையாத எண்ணிக்கையிலானவர்களிடம் மனுக்கள் பெறப்பட வேண்டும். இது சாத்தியமற்ற நடைமுறை. மேலும், மக்கள் பிரதிநிதிகளை பதவி நீக்கம் செய்வதற்கு கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்ற ஆலோசனையும் தவறானது.
பொய்யான கையெழுத்துகளால் பிரச்னை ஏற்படலாம். அன்னா ஹசாரே குழுவினர் உட்பட, குறிப்பிட்ட சில தரப்பினர், தேர்தலில் பண பலம் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறுகின்றனர். இது, தேர்தல் கமிஷனுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே வருத்தம் அளிக்கும் விஷயம் தான். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், "யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை' என்பதை குறிப்பிடும் "பட்டன்' வசதியை ஏற்படுத்துவது உட்பட, பல்வேறு ஆலோசனைகள் உள்ளன.
தேர்தல் சீருத்தம் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பது வரவேற்கத்தக்க விஷயம் தான். அதே நேரத்தில், பார்லிமென்டின் பெருமைகளை சீர்குலைக்கும் வகையில் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு குரேஷி கூறினார்.
குரேஷி, தலைமை தேர்தல் கமிஷனர் : னநாயகம் என்ற பெயரில், பார்லிமென்ட் ஜனநாயகத்தை சீர்குலைப்பது சரியல்ல. அரசியல் அமைப்பு சட்டப்படி, பார்லிமென்டில் தான் சட்டம் இயற்றப்பட வேண்டும்; தெருவில் சட்டம் இயற்ற முடியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக