புதன், 28 டிசம்பர், 2011

புதுவை, கடலூரில் கடல் கொந்தளிப்பு ஊருக்குள் நீர் புகுந்தது வீடுகள் இடிந்து தரைமட்டம்


புதுச்சேரி : கடலூர், புதுவையில் கடல் கொந்தளிப்பு காரணமாக 5 வீடுகள் இடிந்து விழுந்தது. இதனால் விடிய, விடிய தூங்காமல் மீனவர்கள் விழித்திருந்தனர். சென்னைக்கு அருகே வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தால் கடல் வழக்கத்தை விட கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. புதுவை அடுத்த தமிழக பகுதியான சின்னமுதலியார்சாவடி மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் சந்திரன், தம்பிகண்ணு, மூர்த்தி, பாலு, முத்துக்கண்ணு ஆகியோரது கூரை மற்றும் மாடி வீடுகள் இடிந்து தரைமட்டமானது. படகுகள், மீன் வலைகளும் சேதமடைந்தன.
இதனால் சந்திராயன் குப்பம், சின்னமுதலியார்சாவடி, காலாபட்டு மீனவர்கள், சுனாமி பீதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய விடிய விழித்திருந்தனர். கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால், ஆரோவில் பீச்சில் நேற்று முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுனாமி நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன.
இரவு 10 மணியளவில் ராட்சத அலைகள் கரையை தாண்டி குழந்தைகள் விளையாட்டு திடல் வரை பாய்ந்தன. கடலோரத்தில் உள்ள குடிசைகளுக்குள் கடல்நீர் புகுந்தது. கடலூர் முகத்துவாரம் பகுதியில் மீனவர்களின் 15 விசைப்படகுகள், கடல்நீர் உப்பனாற்றில் ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கடல் சீற்றத்தால் நேற்றிரவு கடலோர கிராம மக்கள் விடிய விடிய தூங்காமல் அச்சத்துடன் விழித்திருந்தனர்

கருத்துகள் இல்லை: