திங்கள், 26 டிசம்பர், 2011

மலபார் நகைக்கடை ஸ்பான்சரில் இசை நிகழ்ச்சி: பெ.தி.கழகம் கோரிக்கைக்கு இளையராஜா பதில்


28.12.2011 அன்று சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 5.30 மணிக்கு, இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் 'என்றென்றும் ராஜா' இ,சைநிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு மலபார் நகைக்கடை நிறுவனமும் ஸ்பான்ஸர் செய்துள்ளது.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக இருக்கும் கேரள அரசு மற்றும் கேரள வியாபார நிறுவனங்களுக்கு இளையராஜா இசையமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்த, பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் தலைமையில், தென்சென்னை மாவட்ட தலைவர் தபசி குமரன் மற்றும் தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி உள்பட 50க்கும் அதிகமான பெரியார் திராவிடர் கழகத்தினர், சென்னை தியாகராயர் நகர் முருகேசன் தெருவில் இருக்கும் இளைஞயராஜாவின் வீட்டு முன்பாக நேற்று காலை சென்றுள்ளனர். அப்போது இளையராஜா ஊரில் இல்லை என்றும், அவர் வெளிநாடு சென்றிருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை அறிந்த தியாகராயநகர் காவல்துறை உதவி ஆணையாளர் தமிழ்ச்செல்வன் அங்கு வந்து, அனுமதி இல்லாமல் ஊர்வலம் நடத்தவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ கூடாது. உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது என்று கேட்டுள்ளார்.
நாங்கள் ஆர்ப்பட்டோமா, போராட்டமோ நடத்த வரவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழரான இளையராஜா மலையாள நிறுவனத்திற்கு இசை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்பதை கோரிக்கை மனுவாக கொடுக்க வந்துள்ளோம் என்று சொல்லியுள்ளார்கள்.
இதில் உள்ள நியாகத்தை புரிந்துகொண்ட காவல்துறை உதவி ஆணையாளர், இளையராஜா உதவியாளரை அழைத்து அவரிடம் மனு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அதற்கு பிறகு வெளிநாட்டில் உள்ள இளையராஜா, காவல்துறை உதவி ஆணையாளரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது, இந்த இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒப்பந்தம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே கையொப்பம் ஆகிவிட்டது. என் துணைவியாரின் மரணத்திற்கு பிறகு, எந்த நிகழ்ச்சியையும் நடததவில்லை. இந்த நிகழ்ச்சியை நடத்த ஒரு சிக்கல் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடத்தினால் தமிழர்களின், தமிழ் அமைப்புகளின் பலமான கண்டனத்துக்கு ஆளாவேன் என்பதும் எனக்கு தெரியும். எப்படியாவது நான் நிகழ்ச்சியை தள்ளிப்போடுவதற்கோ, கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதற்கோ ஏற்பாடு செய்கிறேன் என்று போராட்டக்காரர்களிடம் கூறும்படி காவல்துறை உதவி ஆணையாளரிடம் இளையராஜா தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலும் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துவாரேனால், பெரியார் திராவிடர் கழகம், தமிழின ஆதரவு அமைப்புக்களை திரட்டி அந்த நிகழ்ச்சியை ரத்து செய்வோம் என்று பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: