பாவயோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கூறியுள்ள கீதையை எரிக்கச் சொல்வது குற்றமாம் - வழக்குப் பதிவாம்!
லக்னோ, டிச.29- பாவயோனி யில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கீதை கூறுவது குற்றமில் லையாம்; அப்படிக் கூறும் கீதையை எரிக்கச் சொல்லுவதுதான் குற்ற மாம் - எரிக்கச் சொன்ன பெண் மீது வழக்குத் தொடுக்கப்பட் டுள்ளது.
பெண்களுக்கு எதிரானதாக இருப்பதால் பகவத் கீதையை எரிக்க வேண்டும் என்று மக்களைத் தூண்டியதுடன், இந்து கடவுள்கள், கடவுளச்சிகளுக்கு எதிராக அநாக ரிகமான கருத்துகளை வெளியிட் டார் என்ற குற்றச்சாற்றின் பேரில், Facebook (பேஸ்புக்) மற்றும் பஞ்சாப் நாளிதழ் ஆசிரியர் ஒருவர் மீது காவல்துறையினரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது.இந்திய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டம் (2000) இன் பிரிவு 66-ஏ யின் கீழும் சமூக சேவையாளர் நியூடான் தாகூர் என்னும் பெண்மணி அளித்த புகாரின் பேரில் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள் ளது. சி.அய்.சும்பர் மற்றும் முக புத்தகம் (பேஸ்புக்) நிறுவனமும் இந்த முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாற்றப்பட்டுள்ளனர்.பகவத் கீதையின் 9 ஆவது பகுதியில் பெண்களை பாவ யோனி என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அதனை எரிக்க வேண்டும் என்று மக்களைக் கேட்டுக் கொள்ளும் செய்தி ஒன்றை பஞ்சாப் நாளிதழ் ஆசிரியர் சும்பர் வெளியிட்டதாகக் குற்றம் சாற்றப்பட்டுள்ளது.பெண் களுக்கு சமஉரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாக கீதை உள்ளது என்று அவர் கூறியுள் ளார். ரஷ்யாவில் கீதையைத் தடை செய்ய உத்தேசித்துள்ளது போல இந்தியாவிலும் தடை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
கிருஷ்ணன், பிரம்மா போன்ற இந்து கடவுள்கள், கடவுளச் சிகளை அவர் இழிவு படுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாற்றப்பட்டுள்ளது.
இது போன்ற மொழியைப் பயன்படுத்துவது கலவரங்களை உண்டாக்கி சமூக மக்களிடையே எதிர்ப்பு உணர்வைத் தூண்டிவிடும் என்று கூறியுள்ள தாகூர், இது மதநல்லிணக்கத்தைக் கெடுத்து நாட்டின் ஒற்றுமையைக் குலைக் கும் என்று கூறியுள்ளார். அமை தியைக் குலைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வேண்டு மென்றே இந்து கடவுள்களை அவர் இழிவுபடுத்தியுள்ளதாகக் கூறப்பட் டுள்ளது.
ஓர் அய்.பி.எஸ். காவல்துறை அதிகாரியான நியூடான் தாகூரின் கணவர் அமிதாப் காந்தியை நான் வெறுக்கிறேன் என்ற ஒரு குழுவி னரின் மீது இது போன்ற முதல் தகவல் அறிக்கையை இதற்கு முன் பதிவு செய்துள்ளார்.
இந்து கடவுள்கள் மீது அநாகரி கமான முறையில் செய்திகளையும் படங்களையும் வெளியிட்டதாக குற்றம் சுமத்தி இந்த நியூடான் அம்மையார் முக புத்தகம் (பேஸ்புக்) நிறுவனத்தின் மீதும் மற்றவர்கள் மீதும் மீரட் நகரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வைத் துள்ளார்.
அமெரிக்க நாட்டின் கலி ஃபோர்னியா மாநிலத்தின் பாவ் ஆல்டோ நகரைத் தலைமையிட மாகக் கொண்டுள்ள முக புத்தகம் (பேஸ்புக்) நிறுவனத்தையும் ஒரு குற்றவாளி யாக
1 கருத்து:
Oh God
கருத்துரையிடுக