கடந்த 2002 தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகப் பங்காற்றிய நபர்கள்/நிறுவனங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறேன்.
விருதுகளுக்கு நான் வகுத்துக்கொண்ட விதிமுறைகள்
- தமிழில் நேரடியாக உருவாக்கப்பட்ட திரைப்படமாகவோ, தமிழில் மறுஆக்கம் செய்யப்பட்ட திரைப்படமாகவோ, தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்திய மொழித் திரைப்படமாகவோ இருத்தல் வேண்டும்.
- திரைப்படம் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான தேதிகளில் சென்னையில் வெளியாகி இருத்தல் வேண்டும் (மத்திய திரைப்படத் தணிக்கைத் துறை சான்றிதழ் தேதி கணக்கில் கொள்ளப்படுவதில்லை).
- விருதுகளுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அமைப்பின் நடுவர் திரைப்படத்தை முழுமையாகப் பார்த்து விட்டால் அப்படம் விருதுகளின் அனைத்து பிரிவுகளுக்கும் விண்ணப்பித்ததாகப் பொருள் கொள்ளப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விடும்.
ஆடுகளம் * காவலன் * சிறுத்தை * யுத்தம் செய் * தூங்காநகரம் * பயணம் * நடுநிசி நாய்கள் * குள்ளநரிக்கூட்டம் * நஞ்சுபுரம் * பொன்னர் – சங்கர் * கோ * வானம் * அழகர்சாமியின் குதிரை * ஆண்மை தவறேல் * ஆரண்ய காண்டம் * அவன் இவன் * நூற்றெண்பது * தேநீர் விடுதி * தெய்வத்திருமகள் * காஞ்சனா * போடிநாயக்கனூர் கணேசன் * போட்டா போட்டி 50-50 * ரௌத்திரம் * மங்காத்தா * எங்கேயும் எப்போதும் * வந்தான் வென்றான் * முரண் * வகை சூட வா * வேலூர் மாவட்டம் * சதுரங்கம் * 7-ஆம் அறிவு * வேலாயுதம் * தம்பி வெட்டோத்தி சுந்தரம் * வித்தகன் * மயக்கம் என்ன * போராளி * ஒஸ்தி * மம்பட்டியான் * மௌனகுரு * ராஜபாட்டை * ரா-1 * டர்ட்டி பிக்ச்சர் * (மொத்தம் – 42)
2011 விருது முடிவுகள்
- சிறந்த திரைப்படம் – ஆரண்ய காண்டம்
- சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – கோ
- சிறந்த இயக்குநர் – தியாகராஜன் குமாரராஜா (ஆரண்ய காண்டம்)
- சிறந்த திரைக்கதை – தியாகராஜன் குமாரராஜா (ஆரண்ய காண்டம்)
- சிறந்த வசனம் – தியாகராஜன் குமாரராஜா (ஆரண்ய காண்டம்)
- சிறந்த கதை – வெற்றிமாறன் (ஆடுகளம்)
- சிறந்த பின்னணி இசை – யுவன் ஷங்கர் ராஜா (ஆரண்ய காண்டம்)
- சிறந்த ஒளிப்பதிவு – பி.எஸ்.வினோத் (ஆரண்ய காண்டம்)
- சிறந்த படத்தொகுப்பு – பிரவீன் / ஸ்ரீகாந்த் (ஆரண்ய காண்டம்)
- சிறந்த கலை இயக்கம் – விதேஷ் (ஆரண்ய காண்டம்)
- சிறந்த ஆடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர் (ஆரண்ய காண்டம்)
- சிறந்த ஒப்பனை – அவன் இவன்
- சிறந்த ஒலிப்பதிவு – ரத்னவேலு / வெங்கடேஷ் (ஆரண்ய காண்டம்)
- சிறந்த VFX – JEFFERY KLIESER, HARESH HINGORANI & KEITAN YADAV (ரா-1)
- சிறந்த சண்டை அமைப்பு – ஆக்ஷன் பிரகாஷ் (யுத்தம் செய்)
- சிறந்த நடன இயக்கம் – தினேஷ் குமார் (ஒத்த சொல்லால – ஆடுகளம்)
- சிறந்த பாடல் இசை – ஜிப்ரான் (வாகை சூட வா)
- சிறந்த பாடல் ஆசிரியர் – வைரமுத்து (வாகை சூட வா)
- சிறந்த பின்னணி பாடகர் – நரேஷ் ஐயர் (நான் சொன்னதும் – மயக்கம் என்ன)
- சிறந்த பின்னணி பாடகி – சின்மயி (சரசரசாரக்காத்து – வாகை சூட வா)
- சிறந்த நடிகர் – விக்ரம் (தெய்வத்திருமகள்)
- சிறந்த நடிகை – இனியா (வாகை சூட வா)
- சிறந்த துணை நடிகர் – வ.ஐ.ச.ஜெயபாலன் (ஆடுகளம்)
- சிறந்த துணை நடிகை – ஸ்வப்னா ஆப்ரஹாம் (நடுநிசி நாய்கள்)
- சிறந்த குணச்சித்திர நடிகர் – சோமசுந்தரம் (ஆரண்ய காண்டம்)
- சிறந்த குணச்சித்திர நடிகை – அனுஷ்கா (வானம்)
- சிறந்த வில்லன் நடிகர் – ஜாக்கி ஷெராஃப் (ஆரண்ய காண்டம்)
- சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம் (சிறுத்தை)
- சிறந்த குழந்தை நடிகர் – பேபி சாரா (தெய்வத்திருமகள்)
- சிறந்த டைட்டில் கார்ட் – கோ
- சிறந்த ட்ரெய்லர் – ஆரண்ய காண்டம்
- சிறந்த திரை புத்தகம் – THE BEST OF TAMIL CINEMA – 1931 to 2010 (ஜி.தனஞ்ஜெயன்)
- சிறந்த திரை விமர்சகர் : சுரேஷ் கண்ணன் (http://pitchaipathiram.blogspot.com/)
-சரவண கார்த்திகேயன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக