- ஜல்லிக்கட்டு நடத்துவோர் ரூ. 2 லட்சம் டெபாசிட் தொகை கட்ட வேண்டும்.
- புளூகிராசில் சான்றிதழ் வாங்க வேண்டும்.
- 4 காளைகளுக்கு மேல் ஒரு வீரர் அடக்கக் கூடாது.
- ஒரே நேரத்தில் எல்லா காளைகளையும் அவிழ்த்துவிடக் கூடாது.
- கொம்புகள் கூர்மையாக இருந்தால் மரக்கவசம் அணிய வேண்டும்
- போதை வஸ்துகளை காளைகளுக்கு கொடுக்கக் கூடாது
- காளையை அடக்கும் வீரர்கள் வருவாய் துறையினரிடம் பதிவு சான்றிதழ் பெற வேண்டும்
- மாடு பிடி வீரர்கள் மதுபானங்கள் அருந்திருக்கக் கூடாது
- மைதானத்தில் ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும், மருத்துவக் குழு இருக்க வேண்டும்
- வீரர்கள் அனைவரும் சீருடை அணிந்திருக்க வேண்டும்
- போட்டிகள் முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்
- குடிநீர் வசதி, பார்வையாளர்களுக்கு போதுமான வசதிகளை செய்ய வேண்டும்
.மதுரை: உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்கு மதுரை மற்றும் சுற்று வட்டார மக்கள் தயாராகி வரும் நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த 77 நிபந்தனைகளை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் அறிவித்துள்ளார். இந்த நிபந்தனைகளுக்கு மாடு பிடி வீரர்கள் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் பிரசித்தி பெற்றவையாகும்.அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. தற்போது உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி வழக்கு நிலுவையில் உள்ளது. இடைக்கால நிவாரணமாக பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.
அதன்படி வருகிற ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு 77 நிபந்தனைகளை, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் இன்று அறிவித்தார்.
நிபந்தனைகள் மிகக் கடுமையாகவே உள்ளன.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மாடு பிடிவீரர்கள் இந்த நிபந்தனைகள் மிகக் கடுமையானவை.மேலும் பல கிராமங்களில் இந்த நிபந்தனைகளில் உள்ள பல அம்சங்களைக் கடைப்பிடிக்க போதுமான வசதிகள் இல்லை. எனவே இவற்றைப் பூர்த்தி செய்வது மிகக் கடினமானது என்று கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக