பாண்டா ஏஸ்: இந்தோனேசியாவில் 7 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு சிறுமி உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவள் பெற்றோருடன் சேர்த்து வைக்கப்பட்டாள்.
இந்தோனேசியாவின் கடல் பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, சுனாமி பேரலைகள் உருவாகி இந்தியா, இலங்கை உள்பட பல நாடுகளின் கடற்கரையை தாக்கின. இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாயினர். ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனார்கள்.
இதில் இந்தோனேசியாவின் மீலாபோ நகரை அடுத்த உஜாங் பரோ கிராமத்தைச் சேர்ந்த வதி என்ற மேரி யுராண்டா சிறுமியும் சுனாமியில் காணாமல் போனாள். 8 வயதான இவளை பல நாட்கள் தேடி அலைந்த பெற்றோர், உயிரிழந்திருக்கலாம் என கருதி முயற்சியை கைவிட்டனர்.
இந்நிலையில், இப்ராகிமின் நண்பர் ஒரு சிறுமியை அழைத்து வந்தார். இந்த பெண் டீக்கடை ஒன்றில் தனியாக உட்கார்ந்திருந்ததாகவும், அவளிடம் விசாரித்ததில் தனது தாத்தா இப்ராகிமை தேடி வந்ததாக கூறியதால் அழைத்து வந்ததாக நண்பர் கூறியுள்ளார்.இந்தோனேசியாவின் கடல் பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, சுனாமி பேரலைகள் உருவாகி இந்தியா, இலங்கை உள்பட பல நாடுகளின் கடற்கரையை தாக்கின. இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாயினர். ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனார்கள்.
இதில் இந்தோனேசியாவின் மீலாபோ நகரை அடுத்த உஜாங் பரோ கிராமத்தைச் சேர்ந்த வதி என்ற மேரி யுராண்டா சிறுமியும் சுனாமியில் காணாமல் போனாள். 8 வயதான இவளை பல நாட்கள் தேடி அலைந்த பெற்றோர், உயிரிழந்திருக்கலாம் என கருதி முயற்சியை கைவிட்டனர்.
அப்போதுதான் சுனாமியில் காணாமல் போன தனது பேத்தியின் நினைவு வந்தது. உடனடியாக வதியின் அப்பாவையும், அம்மா யுஸ்னியார் பின்டி இப்ராகிம் நூரையும் (35) அழைத்தார். அவரை பார்த்ததும் கதறி அழுதாள் வதி. Ôஎன்னுடைய அம்மாதான்..Õ என்று அலறினாள். யுஸ்னியார் கூறுகையில், ÔÔவதி என் மகள்தான். அவளுடைய அங்க அடையாளங்கள் எனக்கு தெரியும். டிஎன்ஏ டெஸ்ட் தேவையில்லை. என் மகளை உயிருடன் பார்ப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லைÕÕ என்று ஆனந்த கண்ணீர் வடித்தார்.
ÔÔசுனாமி வந்த போது என்னையும் சகோதரியையும் அப்பாதான் ஒரு படகில் தூக்கி வைத்து அனுப்பினார்ÕÕ என்று கடந்த கால நினைவுகளை கூறுகிறாள் மேரி யுராண்டா. ஆனால், சகோதரி உயிருடன் இருக்கிறாளா என்று தெரியவில்லை.
சுனாமி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அந்த சிறுமியை, பாண்டா ஏஸ் என்ற இடத்தில் ஒரு பெண் காப்பாற்றி உள்ளார். ஆனால், சிறுமியை பிச்சை எடுக்க கட்டாயப்படுத்தி உள்ளார். பணம் கிடைக்காத போது வதியை அந்த பெண் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மனம் உடைந்த அந்த சிறுமி, தனது பெற்றோரை தேடி மீலாபோ நகருக்கு வந்ததாக வதி கூறினாள். இவளுக்கு இப்போது வயது 15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக