தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் 17/10/2011 அன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
பாமக நிறுவனர் ராமதாஸ், திண்டிவனத்தில் இறுதி கட்ட பிரசாரம் செய்தார். திண்டிவனம் நகராட்சி சேர்மன் பதவிக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர் மலர் சேகரை ஆதரித்து காந்தி திடலில் அவர் பேசுகையில்,<
தமிழக அரசு கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, ஆடு, மாடுகளை வழங்கி வருகிறது. இது தான் வறுமையை ஒழிப்பதா, இதுதான் முன்னேற்றமா, ஆடு, மாடுகள் வேண்டும் என யார் கேட்டது.
2016ல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும். இன்று விளை நிலங்கள் எல்லாம் வீட்டு மனையாக மாறி வருகிறது. நகரை மேம்படுத்த தண்ணீர், தடையில்லா மின்சாரம், பாதாள சாக்கடை திட்டம் என மற்ற கட்சிகள் பொய் வாக்குறுதிகளை கூறி ஓட்டு கேட்டு வருகின்றன.
இதற்குமுன் இதே கட்சிகள் நகராட்சியை ஆண்டபோது ஏன் இதனை செய்யவில்லை? இவ்வாறு ராமதாஸ் பேசினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக