ஞாயிறு, 16 அக்டோபர், 2011

எல்லாத்தையும் இணைச்சு மினி பைக் உருவாக்கினோம்.

சின்னஞ் சிறு பைக்கே...



பைக் மோகம், இளசுகள் தொடங்கி பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் வசீகரிக்கும் என்பது உண்மைதான். இதற்கு சிறுவர்களும் விதிவிலக்கு அல்ல! இப்போது அவர்களுக்கும் அச்சு அசலாக இன்ஜின் பொருத்திய பைக்குகளும் மார்க்கெட்டில் கிடைக்கின்றன.

இந்த பைக்குகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் விலை அதிகம். அதே சமயம், இங்கேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு குட்டி பைக்கை உருவாக்கும் கில்லாடி மெக்கானிக்குகளும் உள்ளனர். அப்படிப்பட்ட ஒருவர்தான் ஈரோடு கோட்டை நேரு வீதியில் வொர்க் ஷாப் வைத்திருக்கும் பாலு. ஆர்டருக்கு ஏற்ப மினி பைக்கை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

''ஆரம்பத்தில் நானும் மற்ற மெக்கானிக்குகள்போல பைக் ரிப்பேர் மட்டும்தான் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஒரு நாள் பைக் சர்வீஸ் செய்ய அப்பாவும் அவரோட பத்து வயது பையனும் வந்தாங்க. அந்தப் பையனுக்கு பைக் ஓட்ட கத்துக்கணும்னு ரொம்ப ஆசை. அவன் என்கிட்ட, 'ஏன் அங்கிள், சைக்கிள்ல குட்டி சைக்கிள் இருக்கு. அது மாதிரி சின்னப் பசங்க ஓட்டுற மாதிரி குட்டி பைக் எதுவும் இல்லையா?’னு கேட்டான்.

உண்மையிலேயே வெளிநாடுகளில் அந்த மாதிரி மினி பைக் இருக்கு! அதெல்லாம் லட்சக்கணக்கான ரூபாய் விலை. அதனால, நாமே சின்ன பட்ஜெட்ல ஒரு மினி பைக்கை உருவாக்கினா என்னன்னு தோணுச்சு. முதல்ல சைக்கிள்ல இன்ஜின் போடலாம்னு யோசிச்சேன். ஏற்கெனவே சைக்கிள்ல இன்ஜின் வந்ததால, முதல்ல ஒரு ஃப்ரேமை உருவாக்கினோம். ஆரம்பத்துல மூணு ஃப்ரேம் வேஸ்ட் ஆச்சு! அதுக்குப் பிறகு நாலாவது ஃப்ரேம் ரெடி பண்ணி, ஒரு பழைய பைக் இன்ஜினை மட்டும் எடுத்துப் பொருத்தினோம். அதுக்குப் பிறகு பைக்குக்குத் தேவைப்படும் மற்ற சின்ன சைஸ் உதிரி பாகங்களைத் தேடி அலைஞ்சு வாங்கினேன். பிறகு எல்லாத்தையும் இணைச்சு மினி பைக் உருவாக்கினோம்.

மற்ற பைக்குகளைவிட மிகக் குறைவான எடை கொண்ட இந்த மினி பைக்கின் மொத்த உயரமே ஒன்றரை அடிதான். ஆனா ஷாக் அப்ஸார்பர், இண்டிகேட்டர், செல்ஃப் ஸ்டார்ட்டர் உட்பட மற்ற பைக்குகளில் இருக்கும் அத்தனை அம்சங்களும் இந்த மினி பைக்கில் கனகச்சிதமாக இருக்கும்!'' என்று தன் தயாரிப்பின் பெருமையைப் பற்றிக் கூறினார் பாலு.

இந்த மினி பைக்கை உருவாக்க அறுபதாயிரம் ரூபாய் செலவானதாம்! ஆனால், முதல் தடவை என்பதால் அதிக செலவானது. தொடர்ந்து செய்ய ஆரம்பித்தபோது, 4 ஸ்ட்ரோக் 35 ஆயிரத்துக்குள்ளேயும், 2 ஸ்ட்ரோக் பைக் 20 ஆயிரத்துக்குள்ளேயும் விலை அடங்கி விட்டது. இந்த பைக்கை சட்டப்படி ரோட்டில் ஓட்டக்கூடாது. வீட்டு காம்பவுண்டுக்குள்ளதான் ஓட்டணும். வளர்ந்து பெரியவனான பிறகு லைசென்ஸ் எடுக்க இந்த குட்டி பைக் ரொம்ப உதவியா இருக்குமில்லையா?'' என்று முடித்தார் பாலு.

thanks vikatan+pangan nashua

கருத்துகள் இல்லை: