நாம் இன்று இலங்கையில் சமாதான மொழி பேசுகின்றோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கை- இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச மொழி அபிவிருத்தி மாநாட்டை இன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். ஜனாதிபதி இங்கு மேலும் கூறுகையில்:
30 வருட பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட அமைதியான சூழலில் இந்த மாநாடு நடைபெறுவது மிகவும் பொருத்தமானது.
இந்த நாட்டில் உள்ள சகல மக்களினதும் மொழி உரிமை பாதுகாக்கப்படும். அத்துடன் மும்மொழி நாடாக இலங்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகின்றது என்றும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக