புதுடில்லி: "பெற்றோர் அல்லது பாரம்பரிய சொத்தில் பெண்களுக்கும் பங்கு உரிமையுண்டு' என, சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த கோட்டீஸ்வரம்மா என்பவர் ஆந்திர ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, ஜகதீஷ் சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
கடந்த 2005ல் கொண்டு வரப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம், பாரம்பரிய சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு. இந்த சட்டத்தின் ஆறாவது பிரிவின்படி, "பாரம்பரிய சொத்து பிரிக்கப்படும் போது, அதில் பெண்களுக்கும் பங்கு அளிக்கப்பட வேண்டும். உயிலில் ஆண்கள் பெயர் இடம் பெற்று, பெண்கள் பெயர் விடுபட்டிருந்தாலும் பெண்கள் அந்தச் சொத்தில் உரிமை கோரலாம்' என, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக