ஞாயிறு, 16 அக்டோபர், 2011

பட்டாசு பதுக்கல்-லலிதா ஜூவல்லரி உரிமையாளர்கள் கைது

Madurai Lalitha Jewellery and Textiles
மதுரை லலிதா ஜூவல்லரி நகை மற்றும் ஜவுளிக் கடையில் அனுமதியின்றியும், அபாயகரமான முறையிலும் பட்டாசுகளை பதுக்கி வைத்ததாக அதன் உரிமையாளர்களைப் போலீஸார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தீபாவளி சீசன். இதனால் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் என எந்தப் பக்கம் திரும்பினாலும் விற்பனை சூடு பிடித்துள்ளது. ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.இந்த நிலையில் மதுரையில் உள்ள பிரபல லலிதா ஜூவல்லரி நகை மற்றும் ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு ஆஃபர் அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ. 1000க்கு ஜவுளிகள் வாங்கினால் பட்டாசு அன்பளிப்பாக அளிக்கப்படும் என அறிவித்தனர். வாடிக்கையாளர்களுக்குத் தருவதற்காக பெருமளவில் பட்டாசுகளையும் வாங்கி ஜவுளிக் கடையில் குவித்து வைத்திருந்தனர். இதனால் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உருவானது.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து சென்று சோதனையிட்டு பெருமளவிலான பட்டாசுகளை மீட்டனர். பின்னர் கடை உரிமையாளர்களான வேலவன், செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வெடி பொருட்களை அபாயகரமான வகையில் பதுக்கி வைத்திருந்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: