ஞாயிறு, 17 ஜூலை, 2011

எந்திரன் பட வசூல் மோசடி-பைனான்சியர் அன்புச்செழியனின் சகோதரர் அழகர்

எந்திரன் பட விநியோக மோசடி விவகாரத்தில் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவின் கூட்டாளியான ஐயப்பன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் திரைப்பட பைனான்சியர் அழகரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகை தனது கரன்சிக் கட்டுக்குள் சிக்க வைத்திருப்பவரான மதுரையைச் சேர்ந்த பிரபல பைனான்சியர் அன்புச் செழியனின் தம்பிதான் இந்த அழகர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.3.53 கோடி பணத்தைத் தராமலும், மிரட்டல் விடுத்து வந்தது தொடர்பாகவும் இருவரையும் கே.கே.நகர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் இயங்கி வரும், ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் கணேசன். இவர், சென்னை கே.கே.நகர் போலீசில் புகார் ஒன்றை நேற்று அளித்தார்.

அதில், சென்னை, மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில், எந்திரன் படத்தை வினியோகிப்பதற்கான உரிமையை, சன், பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்து ஜெமினி பிலிம் சர்க்யூட் பெற்றது.

இப்பகுதிகளில் உள்ள தியேட்டர்களில், சக்சேனாவின் கூட்டாளி ஐயப்பன் மற்றும் சினிமா பைனான்சியர்  ஆகியோர் மூலம், எந்திரன் படம் வெளியிடப்பட்டது.

அப்பகுதிகளில் படம் திரையிடப்பட்டு,8 கோடி ரூபாய் வசூலானது. வசூல் தொகையில், 4.47 கோடி ரூபாயை மட்டும் தந்துவிட்டு, மீதமுள்ள 3.53 கோடி ரூபாயை கேட்டபோது, ஐயப்பனும், அழகரும் தர மறுத்ததுடன், மிரட்டல் விடுத்தனர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்திருந்தார்.

இதை விசாரித்த போலீஸார் அழகரை கைது செய்தனர். ஐயப்பன் ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கிறார். அவரை புதிய வழக்கில் கைது செய்ததற்கான ஆவணங்களை போலீஸார் கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.

கருத்துகள் இல்லை: