செவ்வாய், 19 ஜூலை, 2011

வடக்கு தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம், சிங்களம், தெற்கில் சிங்கள மாணவர்களுக்கு தமிழ், ஆங்கில

ஒரேநாடு ஒரே மக்கள் 

யாழ்ப்பாணம் இந்து மகளிர்கல்லூரி மற்றும் இந்து ஆண்கள் பாடசாலையைச்சேர்ந்த மாணவ மாணவர்கள் முப்பது பேர் ஆசிரிய ஆசிரியைகள் ஆகியோர்அநுராதபுரம் தம்மென்னாபுர வித் தியாலயத்திற்கு வருகை தந்தனர். இவர்களை பாடசாலை அதிபர் எஸ். எம். திஸாநாயக்க உட்பட ஆசிரியர் குழாம், கிராமவாசிகள் மிகவும் இன்முகத்துடனும் மலர்செண்டுகள் வழங்கியும் வரவேற்றனர். இந் நிகழ்வுகளை முன்னிட்டு பாடசாலை தமிழ் கலாசாரங்களு க்கு ஏற்றவாறு வாழை மரங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டிருந்தமை கண்கொள்ளா காட்சியாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஒரே நாடு, ஒரே தேசம் என்ற கொள்கையின் கீழ் வடக்கு, தெற்கு பாடசாலை மாணவர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும் யாழ் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு இனிப்புப் பண்டங்கள் உணவு என்பன பரிமாறப்பட்டன. அவர்கள் கலை, கலாசார நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர்
வடக்கு தெற்கில் மீண்டுமொரு இனப்பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும் இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு தமிழ்
மாணவர்களுக்கு ஆங்கிலம், சிங்களம், தெற்கில் சிங்கள மாணவர்களுக்கு தமிழ், ஆங்கில மொழிகளிலும் கல்வி கற்கக் கூடிய வசதிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இவ் விஜயம் தொடர்பாக கருத்து தெரிவித்த யாழ் பாலிகா வித்தியாலய மாணவி மயுஷா தர்ம குலசிங்கம் நானும் எனது சகோதர மாணவிகளும் முதன் முறையாகவே அநுராதபுரத்திற்கு வருகை தந்துள்ளோம். சிங்கள மாணவர்கள், சிங்கள மக்கள் எவ்வளவு கருணையுள்ளவர்கள் என்பதை புரிந்து கொண்டோம்.
மொழிப் பிரச்சினை காரணமாக கருத்து தெரிவிப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டோம் தம்மென்னாபுர மஹேஷ் துஷார எமது இராணுவத்தினர் வடக்கில் கொல்லப்படும் போதும் தெற்கில் குண்டு வெடிப்புகள் நிகழும் போதும் யாழ். தமிழ் மக்கள் மீது வெறுப்படைந்தோம்.
ஆனால் உங்களோடு கழித்த இரு நாட்களையும் வாழ்க்கையில் மறக்க முடியாது.
இந் நிகழ்வுகளை ஏனைய பாடசாலைகளும் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை: