ஞாயிறு, 14 நவம்பர், 2010

நாவற்குழி அரச காணிகளை சிங்கள மக்கள் கைப்பற்றி கொண்டதை தொடர்ந்து தமிழ் மக்களும் காணியை கைப்பற்றி கொண்டனர்!


நாவற்குழியில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை யாழ்ப்பாண மக்களும் நேற்றுக் கைப்பற்றிக் கொண்டனர். நாவற்குழியில் உள்ள அரச காணிகளில் சுமார் 70 சிங்கள குடும்பங்கள் கடந்த 10 ஆம் திகதி இரவோடு இரவாக குடியேறினர். இது பல்வேறு மட்டத்திலும் பிரச்சினைகளைத் தோற்றுவித்தது. இந் நிலையில் நேற்று அப்பகுதிக்குச் சென்ற சாவகச்சேரி மற்றும் குருநகர் வாசிகள் எஞ்சிய நிலப்பரப்புக்களையும் கைப்பற்றினர். இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

எனினும் சிங்கள மக்கள் பிடித்த நிலப் பரப்புக்களை தவிர மற்றைய நிலங்களை யாழ். வாசிகள் பிடித்துக் கொண்டனர். இதனால் சிறுதி நேரம் பதற்றம் நிலவியது.எனினும் சிங்கள மக்கள் பிடித்த நிலப்பரப்புக்களை தவிர மற்றைய நிலங்களை யாழ். வாசிகள் பிடித்துக் கொண்டனர்.
இதேவேளை இக் காணிகளில் குடியமர எவருக் கும் அனுமதி வழங்கப்படவில்லை. என அப்பகுதி கிராம சேவையாளர் தெரிவித்தார். தற்போது சுமார் 50 குடிசைகளை சிங்கள மக்கள் அமைத்துக் கொண்டுள்ளதுடன் 50ற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான இடங்களை யாழ்ப்பாண மக்கள் அமைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: