.இலங்கையில் இருந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள் பணிப்பெண்களாக கடமையாற்ற வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்>இதில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்றனர்
இந்தநிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்கள் பலர் இலங்கையில் பணிப்பெண்களாக தொழில் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிலிப்பைன்ஸில் உள்ள பெண்கள் இலங்கையின் 20 ஆயிரம் ரூபா சம்பளத்தின் அடிப்படையில் உயர்தர குடும்பங்களுக்கு பணிப்பெண்களாக சேர்த்துக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை மொழி மற்றும் கல்வித்துறையில் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் கூடுதல் திறமைகளை கொண்டிருப்பதன் காரணமாக இலங்கை உட்பட்ட ஏனைய நாட்டவர்களை விட அதிக ஊதியம் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மத்திய கிழக்கு நாடுகள் லெபனான் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் 81 சதவீதமான இலங்கை பணிப்பெண்களும் 39 சதவீதமான பிலிப்பைன்ஸ் பணிப்பெண்களும் பணியாற்றிவருவதாக சர்வதேச ஆய்வுகளின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக